Published : 17 Jul 2019 01:36 PM
Last Updated : 17 Jul 2019 01:36 PM

அரசக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடையால் பிரசவம் பார்ப்பதில் சிக்கல்: பெண்கள், பச்சிளம் குழந்தைகள் கடும் அவதி

அரசக் குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அண்மையில் பிரசவம் நட ந்த பெண், குழந்தையுடன் உள்ளார். படம்: ந.முருகவேல்

விருத்தாசலம் அடுத்த அரசக் குழியில் இயங்கி வரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவர்கள் உட்பட 12 பேர் பணியாற்றி வருகின்றனர். 6 படுக்கைகள் கொண்ட இந்த நிலையத்தில் மாதம் சராசரியாக 12 பிரசவம் நடக்கின்றன. இது தவிர அரசக்குழி, முதனை, கொளப்பாக்கம், ஊத்தங்கால், கொம்பாடிக் குப்பம், இருப்பு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தினசரி சராசரியாக 200 பேர் இங்கு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தச் சூழலில் கடந்த 6 மாதமாக இங்கு அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக மின்தடை 12 மணி
நேரமாக நீடித்துள்ளது. இதனால் பிரசவத்திற்காக அனுமதிக்கப் படும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதில் இடர்பாடு நிலவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 14-ம் தேதி ஊமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவர் மகப்பேறுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பிறபகல் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது மின்சாரம் தடைபட்டிருந்தது. இதேபோல் சுகன்யா என்பவருக்கு 3 தினங்களுக்கு முன்பு இரவில் பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது மின்சாரம் இருந்தபோதிலும் அதிகாலையில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரசவித்த தாய்மார்கள் மட்டுமின்றி பச்சிளம் குழந்தைகளும் கொசு தொல்லைக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக நிலைய மருத்துவர் சித்ராவிடம் கேட்டபோது, “கடந்த 6 மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மின்தடையால் குளிரூட்டபட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய தடுப்பூசிகள் வீணாகும் சூழல் இருப்பதாலும், பிரசவம் நடைபெறுவதாலும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என விருத்தாசலம் மின்வாரிய செயல் பொறியாளருக்கு கடந்த மே 20-ம் தேதி கடிதம் அளித்தும் மின்தடை தொடர்கிறது.

இன்னும் 3 மாதத்திற்கு இப்படி தான் இருக்கும் என பதிலளிக்கின்றனர். இன்வெர்ட்டர் இருந்தாலும், அவற் றைக் கொண்டு பிரசவத்திற்கான பணிகளை மேற்கொள்ள முடி யாது. எனவே தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மின்தடை தொடர்பாக விருத்தாசலம் மின்வாரிய செயல் பொறி யாளர் சேகரிடம் கேட்டபோது, “தீனதயாள் உபத்யா திட்டத்தில் விவசாயம் சார்ந்த பயன்பாடு, விவசாயம் சாராத பயன்பாடு என மின்விநியோகத்தை மாற்றிய மைக்கும் பணி நடைபெற்றதால், மின்தடை ஏற்பட்டது. அந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (இன்று) முதல் அரசக்குழி பகுதியில் தடையின்றி மின் விநியோகம் இருக்கும்” என்றார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x