Published : 21 Jul 2015 08:37 AM
Last Updated : 21 Jul 2015 08:37 AM

திண்டுக்கல்லில் நள்ளிரவில் 2 ஊர் மக்களிடையே மோதல்: வீடு, வாகனங்கள் சேதம்; 6 பேருக்கு அரிவாள் வெட்டு

திண்டுக்கல் பேகம்பூர் அருகே சவேரியார்பாளையத்தை சேர்ந்த எபனேசர், ஜேசுராஜ், நேருஜி நகரைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோர், கடந்த 18-ம் தேதி இரவு வத்தலகுண்டு சாலையில் நின்று கொண்டிருந்தனர். அப் போது, அவர்களுக்கும், அசனாத் புரத்தைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், அசனாத்புரத்தைச் சேர்ந்தவர்கள் எபனேசர், ஜேசுராஜ், சக்திவேலை தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் நள்ளிரவு, அசனாத்பு ரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சவேரியார் பாளையம், அசனாத்புரத்தில் நான்கு வீடுகள், 3 வாகனங்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்தன.

அவர்களை தடுக்க முயன்றவர் களை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த 6 பேரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். இரு தரப்பினரும் அடுத்தடுத்து ஒருவரையொருவர் தாக்கி வீடுகள், வாகனங்களை சேதப்படுத்தியதால் சவேரியார் பாளையம், பேகம்பூர், அசனாத்புரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

பதற்றத்தை தணிக்க இரு பகுதிகளிலும் 250-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர். வெளியாட்கள் இந்த இரு ஊர்களிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மதுரை- திண்டுக்கல் சாலையில் சவேரியார்பாளையம் பகுதி மக்கள் மறியலில் ஈடுபட் டனர். சம்பவம் குறித்து எஸ்.பி. சரவணனிடம் கேட்டபோது, குடிபோதையில் ஆரம்பத்தில் சிறிய தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த முன்விரோதத்தில், ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர். இரு தரப்பினரையும் சேர்ந்த 14 பேர் மற்றும் தலைமறைவான பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, அந்த ஊர்களில் இயல்புநிலை திரும்பியுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x