

மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கனிம வளத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: மக்களவையில் நேற்று (ஜூலை 15) ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக் குப் பதிலளித்த மத்திய பெட் ரோலியத் துறை அமைச்சர் தர் மேந்திர பிரதான், “தமிழகத்தில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப் படவில்லை. தமிழகத்தில் 7 ஹைட்ரோ கார்பன் திட்டம் ஒதுக் கப்பட்டு அதில் 2 திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. திட்டப்பணிகள் நடைபெற்று வரு கின்றன.
தமிழகத்துக்கு மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதற்கான உரிமம் தமிழக அரசிட மிருந்து எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியிருக்கிறார். எனவே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது என தமிழக அரசு கொள்கை முடி வெடுத்து அறிவிக்க வேண்டும்.
நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடிவதற்குள் இதனை அறிவிக்க வேண்டும். ஏனெனில் மக்கள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர். நேற்று (ஜூலை 15) இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. எனவே, இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு காண வேண்டும்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: மக்களவையில் மத்திய பெட்ரோ லியத் துறை அமைச்சர் கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ஹைட் ரோகார்பன் ஆய்வு மற்றும் உரிமம் கொள்கை’ படி (Hydrocarbon Exploration and Licensing Policy HELP) ஒற்றை உரிமம் மூலம் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஏலம் விடுகிறது. கனிம வளங்களை கண்டறிந்து இணையதளத்தில் வெளியிட்டு பொதுஏலம் மூலம் நிறுவனங்களு டன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்கிறது. ஆனால், சட்டப்படி மாநில அரசின் அனுமதி இல்லா மல் அந்த மாநிலத்தின் நிலப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது. எக்காரணத்தை முன்னிட்டும் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என அரசு அறிவித்து விட்டது.
மாநில அரசே எதிர்க்கும் போது ஹைட்ரோ கார்பன் திட் டத்தை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள் என உயர் நீதி மன்றமும் கேட்டுள்ளது. அதன் பிறகும் இல்லாத ஒன்றை இருக் கிறது எனக் கூறி மக்களை அச்சுறுத் தும் வகையில் போராட்டம் நடத்தி னால் ஒன்றும் செய்ய முடியாது. என்னை கைது செய்யுங்கள் என தானாக வருபவர்களை எதுவும் செய்ய முடியாது.
மு.க.ஸ்டாலின்: மக்களின் நலனுக்காக போராட்டம் நடத்து பவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசுவது மரபல்ல. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியதைத்தான் இங்கே குறிப்பிட்டேன். கொள்கை முடிவெடுத்து அறிவித்தால் மக்கள் நிம்மதியடைவார்கள்.
அமைச்சர் சி.வி.சண்முகம்: யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என அறிவித்துவிட்டோம். அதன்பிறகும் வரும் வரும் எனக் கூறி அரசிய லுக்காக போராட்டம் நடத்தினால் என்ன செய்ய முடியும். மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த சட்டத்தில் இட மில்லை. எனவே, தமிழக அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியும். அதற் கும் சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.