

தமிழகத்தில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள், வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை என்று சுகாதாரத் துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித் துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் திமுக எம்எல்ஏ பூங்கோதை பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் 89 மருத்துவமனை கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அங்கீ காரம் பெற்றுள்ளன. உடல் உறுப்பு மாற்று குறித்த சட்டத் திருத்தத்தில், மாநில அளவிலான உடல் உறுப்பு தான குழுவை மத்திய அரசுதான் அமைக்க வேண்டும் என்றும், அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், மத்திய அரசின் வழிகாட்டுதலுடன்தான் செயல்பட வேண்டும் என்றும், உடல் உறுப்புக்காக காத்திருப்போர் பட்டியலை தேசிய அளவில் மத்திய அரசு நிர்வகிக்கும் என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
நாட்டில் உள்ள 29 மாநிலங் களில் 16 மாநிலங்கள் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை தொடர் பான சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதில் தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் உண்மை நிலை என்ன என்பது குறித்து அறிய விரும்பு கிறேன்.
இந்த மண்ணில் இருந்து ஒரு உறுப்பு மட்டுமல்ல, ஒரு உயிரணு செல் கூட தமிழனைத் தவிர வேறு எவருக்கும் செல்லக் கூடாது. அதனால் தேசிய காத்திருப் போர் பட்டியலில் தமிழகம் இணை யக்கூடாது. இவ்வாறு பூங்கோதை எம்எல்ஏ பேசினார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதற்காக கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக அரசு விருது பெற்று வருகிறது.
நாடு முழுவதும் 1,274 கொடை யாளர்கள் மூலமாக 7,405 உறுப்பு கள் பெறப்பட்டு, 7,405 உயிர்கள் காப் பாற்றப்பட்டுள்ளன. இந்த சிகிச்சை யில் தமிழகம் தான் இந்தியாவில் முதன்மை மாநிலம் என்பதால், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு உடல் உறுப்புகள் வருவதுதான் அதிகரித்துள்ளது. தமிழகத்திலிருந்து ஒரு உறுப்பு கூட பிற மாநிலங்களுக்கு செல்ல வில்லை. எனவே, தமிழகத்தில் இருந்து தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளென்ன, ஒரு உயிரணு கூட வெளியில் செல் லாது என்பதில் தமிழக அரசு உறுதி யாக உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.