

நிலுவைத் தொகை ரூ.1,836 கோடியை பெற்றுத்தர வலியுறுத்தி யும், வறட்சியில் காய்ந்த கரும் புக்கு உரிய இழப்பீடு தரக் கோரி யும் சென்னையில் நேற்று காத்தி ருப்பு போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட் டனர்.
கரும்பு ஆலைகள் பாக்கி வைத்துள்ள ரூ.1,836 கோடியை அரசு உடனடியாக பெற்றுத்தர வேண்டும். வறட்சியில் காய்ந்த கரும்புக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்16-ம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக் கான கரும்பு விவசாயிகள், நேற்று காலை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்க மாநிலத் தலை வர் என்.பழனிசாமி தலைமையில் அவர்கள் காத்திருப்புப் போராட் டத்தைத் தொடங்கினர். ஆனால், போராட்டத்துக்கு போலீஸ் அனு மதி மறுக்கப்பட்டது. இதனா்ல் கரும்பு விவசாயிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கப் பொதுச் செய லாளர் டி.ரவீந்திரன் கூறியதாவது:
கடந்த 2013 முதல் 2017 வரை கரும்புக்கான பழைய பாக்கி ரூ.1,430 கோடி உள்ளது. 2018-19-ம் ஆண்டில் கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலையைக்கூட ஆலைகள் தரவில்லை. கரும்பு கட்டுப்பாடு சட்டத்தின்படி கரும்பு வெட்டிய நாளில் இருந்து 14 நாட் களுக்குள் அதற்குரிய விலையைத் தர வேண்டும். ஆனால், அதுபோல தருவதில்லை.
இந்த ஆண்டு மட்டும் தனியார் ஆலைகள் ரூ.281 கோடி, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் ரூ.125 கோடி என மொத்தம் ரூ.406 கோடி தர வேண்டும். இதையும் சேர்த்து மொத்தம் ரூ.1,836 கோடியை தமிழக அரசு பெற்றுத் தரக் கோரியும், வறட்சியால் முற்றிலுமாக காய்ந்த கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், பகுதி யாக பாதிக்கப்பட்ட கரும்புக்கு பாதிப்புக்கு ஏற்பவும் இழப்பீடு வழங்கக் கோரியும் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்’’ என்றார்.