Published : 17 Jul 2019 08:49 AM
Last Updated : 17 Jul 2019 08:49 AM

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் எழுதலாம்: மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு தமிழக தலைவர்கள் வரவேற்பு - இந்தியிலும் ஆங்கிலத்திலும் கடந்த 14-ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு ரத்து

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட அஞ்சல்துறை தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு இனி, தமிழ் உள்ளிட மாநில மொழி களில் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்ற மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் அறிவிப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு களுக்காக தமிழில் நடைபெற்று வந்த போட்டித்தேர்வை திடீரென்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே நடத்துவோம் என்று சுற்றறிக்கை வெளியானவுடன், முதலில் திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரிடமும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சினை குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளில் திமுக ஈடுபட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளி லும் இதுகுறித்து திமுக உறுப் பினர்கள் பிரச்சினையைக் கிளப்பி, கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமின்றி, மீண்டும் தமிழிலும் மாநில மொழிகளிலும் தேர்வு நடத்திட வேண்டும் என்று தீவிரமான அழுத்தம் கொடுத்தனர்.

இந்த நிலையில் தேர்வு ரத்து செய்ததுடன் தமிழ் மொழியிலும் இனிமேல் தேர்வு எழுதலாம் என்ற அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். திமுக வெற்றி பெற்று என்ன சாதிக் கப்போகிறது என்று வீண் வாதம் செய்தவர்களுக்கு இப்போது கிடைத்துள்ள வெற்றி, நிரந்தரமான வாய்ப்பூட்டு போடும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இரு மொழிகளில்தான் தேர்வு எழுத முடியும் என்று அறிவித் தது மிகப்பெரிய அநீதியாகும். இதற்கு எதிராக பாமகதான் முதலில் குரல் கொடுத்தது. அதைத் தொடர்ந்துதான் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

இப்பிரச்சினை மக்களவை, மாநிலங்களவையிலும் எழுப்பப் பட்டது. அதைத் தொடர்ந்தே தொலைத்தொடர்புத் துறை அதன் தவறுகளை உணர்ந்து அஞ்சல் துறை போட் டித் தேர்வுகளை ரத்து செய்துள் ளது. அந்த வகையில் இது தமிழ கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி: எதிர்க்கட்சிகள் தெரிவித்த கடுமையான கண்ட னங்கள் காரணமாகவே பாஜக அரசு அஞ்சல் துறையில் பிராந் திய மொழிகளிலு்ம் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தமிழக எம்பிக்களின் முயற்சிகளுக்கு கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி.

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: தமிழர்களின் உணர்வை மதித்து, அஞ்சல்துறை தேர்வை ரத்து செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய அரசுக்கு தேமுதிக சார் பில் நன்றியை தெரிவித்துக்கொள் கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தேர்வுகள் தமிழ் மொழியில் எழுத மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: அஞ்சல் துறைக்கு நடைபெற்ற தேர்வை மத்திய அரசு ரத்து செய் திருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சல் துறைக் கான தேர்வில் தமிழ் மொழி யில் வினாக்கள் இடம் பெறாது என்பதால் பெரும் அதிர்ச்சி அடைந்து இத்தேர்வு முறையை கைவிட வலியுறுத்தினர். இதன் விளைவாக இத்தேர்வு ரத்து செய் யப்பட்டுள்ளது.

ரத்து செய்யப்பட்ட தேர்வுக்குப் பதிலாக விரைவில் தமிழ் மொழி உள்பட பிற மொழி களிலும் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர், எம்பி: தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தி யிலும், ஆங்கிலத்திலும் நடத்தப் பட்ட அஞ்சல்துறை தேர்வை ரத்து செய்து மத்திய அமைச்சர் வெளி யிட்ட அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இனிவரும் காலங்களில் தேவை யில்லாமல் இதுபோன்ற மொழிப் பிரச்சினைகளை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x