Published : 15 Jul 2019 08:58 AM
Last Updated : 15 Jul 2019 08:58 AM

ட்வீட் போட்டா மட்டும் போதுமாய்யா..?

திருப்பூரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரின் மகன் மணித்துரை. இவரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாகச் சொல்லி பணத்தைப் பிடுங்கிய தரகர் ரஞ்சித் என்பவர், தாய்லாந்தில் கொண்டுபோய் நட்டாற்றில் விட்டுவிட்டாராம். உரிய ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்தில் தவித்திருக்கிறார் மணித்துரை. இது குறித்த செய்தியை இணையத்தில் படித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘மணித்துரை தாய்லாந்தில் இருந்து தாயகம்  திரும்புவதற்கான  அனைத்து  உதவிகளையும், இந்தியத் தூதரகம் அளித்து வருகிறது. திருப்பூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என ட்வீட் செய்தார். ஆனால், அமைச்சர் குறிப்பிட்டது போல் மணித்துரைக்கு அப்படி எந்த உதவியும் கிடைக்கவில்லையாம். இதனால், கந்துவட்டிக்கு 4 லட்ச ரூபாய் கடன் வாங்கிக்கொடுத்து மகனை தாய்லாந்திலிருந்து மீட்டு வந்திருக்கும் மாரியம்மாள், “அமைச்சர் சொன்னது தான் நடக்கல... எங்களை ஏமாத்துன தரகர் ரஞ்சித் மீது ஒப்புக்குக்கூட நடவடிக்கை எடுக்க மறுக்குதே போலீஸ்” என்று ஆதங்கப்படுகிறார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x