

அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டாலும் திமுகவில் உள்ள முக்கியத் தலைகள் சிலருடன் இன்னும் பழைய நட்புறவைத் தொடர்கிறாராம் நடிகவேளின் மகன் ராதாரவி. குறிப்பாக மு.க.அழகிரியுடன் நெருக்கமாக இருக்கும் அவர் உதயநிதி, இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டதும் அவரைத் தொடர்புகொண்டு நீண்ட நேரம் உரையாடினாராம். அப்போது, “ஸ்டாலினுக்கு தப்புத் தப்பா யோசனை சொல்றாங்க” என்று சொன்னவர், “உதயநிதிக்கு பதவி குடுத்ததுல யாருக்கு சந்தோஷமோ தெரியாது... ஆனா, அந்த நடிகைக்கு ரொம்ப குஷியா இருந்திருக்கும்” என்று முன்னணி நடிகை ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லிச் சிரித்தாராம்.