

திருச்சி
கஞ்சா வியாபாரி பதுங்கியிருப் பதாக கிடைத்த தகவலின் அடிப் படையில், பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் போலீஸார் சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவிலிருந்து காரில் கஞ்சா கடத்தி வந்த நபர்களை பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே நேற்று முன்தினம் போலீ ஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப் பிடித்தனர். இக்கடத்தலில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி, திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகே உள்ள காவலர் குடியிருப்பில், பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பதுங்கி யிருப்பதாக திருச்சி மாநகர போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது.
இதையடுத்து, காவல் ஆணை யர் அ.அமல்ராஜ் உத்தரவின் பேரில், உதவி ஆணையர்கள் ராமச் சந்திரன் (ரங்கம்), மணிகண்டன் (கன்டோன்மென்ட்) ஆகியோர் தலைமையில், காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று, பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் சோதனையிட் டனர்.
கஞ்சா வியாபாரியின் சகோதரர்
அங்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எதுவும் சிக்காத நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளைஞர் இருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்த போது, அவர் கடந்த நவம்பர் மாதம் சமயபுரம் அருகே 170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த சத்யநாராயண ரெட்டியின் சகோதரரான பிரவீண்குமார் ரெட்டி என்பதும், இவர் மீது குற்ற வழக்கு கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது.
மேலும், தனது முதல் திருமணத் துக்கு விவகாரத்து கிடைத்தவுடன், பிரவீண்குமார் ரெட்டியை முறைப் படி திருமணம் செய்துகொள்ள விருப்பதாக, பெண் காவல் உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
இருவரிடமும் விசாரணை
இதையடுத்து, அங்கிருந்து திரும்பிய போலீஸார், பின்னர் இரு வரையும் செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். தொடர்ந்து, பெண் காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனை, விசார ணையில் கிடைத்த விவரங்களை அறிக்கையாக தயார் செய்து, மாநகர காவல் ஆணையருக்கு அளித்துள்ளனர். அதனடிப்படை யில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என போலீ ஸார் தெரிவித்தனர்.