காமராஜர் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாட முடியாமல் இருட்டடிப்பு; மத்திய, மாநில அரசுகள் மீது முத்தரசன் குற்றச்சாட்டு

காமராஜர் பிறந்தநாளை பள்ளிகளில் கொண்டாட முடியாமல் இருட்டடிப்பு; மத்திய, மாநில அரசுகள் மீது முத்தரசன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

தஞ்சாவூர்

மத்திய, மாநில அரசுகள் காமராஜர் பிறந்தநாளை பள்ளிகளில் கொண் டாட முடியாமல் இருட்டடிப்பு செய் துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றஞ்சாட்டியுள் ளார்.

இதுகுறித்து தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறி யது: அஞ்சல் துறையின் தேர்வுகள் அந்தந்த மாநில மொழிகளில் எழுதப்பட்டு வந்தது. தற்போது இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பது கடும் கண்டத்துக்குரியது. இத்தேர்வை அந்தந்த மாநில மொழிகளில் எழுத மத்திய உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி ரீதியான படுகொலைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 192 கொலைகள் நடந்துள்ளன. இவை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்து, சட்டமாக இயற்றப்பட்டு கொண்டா டப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் உத்தரவின்படி தமிழக பள்ளிக் கல்வித்துறை ஜூலை 15-ம் தேதி பள்ளிகளில் ‘நீர்பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பில் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு' என்ற திட்டத்தை கடை பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மழைநீர் சேகரிக்க எத்தனையோ நாட்கள் இருக்கும்போது, காமரா ஜர் பிறந்தநாளில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது கண்டனத் துக்குரியது. காமராஜர் பிறந்த நாளைகொண்டாட விடாமல், அவரது பிறந்தநாளை இருட்டடிப்பு செய்யும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன.

கர்நாடக அரசிடமிருந்து காவிரி யில் தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்ஜெட் உரை முடிந்த உட னேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால், நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் நாடு முழுவதும் ஜூலை 16-ல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in