

ச.கார்த்திகேயன்
சென்னை
சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் வகை பிரித்து வழங்கும் குப்பைகளை பெற வசதியாக ரூ.3 கோடி செலவில் 34 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நகர்ப்புறங்களில் குப்பைகளை கையாள்வதை முறைப்படுத்த, திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடந்த 2000-ம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. அது தற்காலத் துக்கு ஏற்றவாறு திருத்தப்பட்டு 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதை எந்த உள்ளாட்சிகளும் முறையாக கடைபிடிக்காததால் மக்கள் வசிக்கும் பகுதிகள், ஏரி மற்றும் ஆற்றின் கரையோரங்கள் என நீர்நிலைகள் அனைத்தும் குப்பை கிடங்குகளாக மாறி பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பு களை ஏற்படுத்தின.
தற்போது திடக்கழிவு மேலாண்மை விதிகளை செயல் படுத்த, தூய்மை இந்தியா இயக் கம் மூலமாக அதிக அளவில் உள்ளாட்சிகளுக்கு நிதி வழங்கப் படுகிறது. இதன் பிறகாவது மேலாண்மை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலி யுறுத்தி, தென் மாநிலங்கள் முழு வதும் உள்ள உள்ளாட்சி அமைப்பு களை கண்காணிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் குழு அமைத்து, அதன் தலைவராக, தேசிய பசுமை தீர்ப்பாய தென்னிந் திய அமர்வின் முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணியை நியமித்துள்ளது.
அண்மையில் சென்னை யில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பி.ஜோதிமணி பேசும்போது, “விதிகளை மீறி ஒரு இடத்தில் குப்பைகளை கொட்டி யதற்காக ஒரு மாநகராட்சிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்தோம். அந்த அபராதத்தை கட்டிவிட்டு, எங்களுக்கு வேறு இடம் இல்லை எனக்கூறி, அதே இடத்தில் தான் மீண்டும் குப்பைகளை மாநகராட்சி கொட்டுகிறது” என்றார். அந்த அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு குப்பை மேலாண்மை பெரும் சவாலாக இருந்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில் தின மும் 5 ஆயிரத்து 400 டன் குப்பை கள் சேகரிக்கப்படுகின்றன. இப் பணியில் மொத்தம் 19 ஆயிரத்து 196 துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்க 5 ஆயிரத்து 218 எண்ணிக்கையில் 3 சக்கர சைக்கிள்கள் பயன் படுத்தப்படுகின்றன.
குப்பைகளை பெறும்போதே, வகை பிரித்து பெற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், சென்னை மாநகராட்சி 100 சதவீதம் குப்பைகளை வகை பிரித்து பெறும் நகரமாக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அப்படியே, வகை பிரித்து குப்பைகளை பொதுமக்கள் வழங்கினாலும், அதை பெருவதற்கான வசதி மாநகராட்சியிடம் இல்லை. இரு குப்பைகளையும் சேர்த்தே சைக்கி ளில் கொட்டி எடுத்துச் சென்று வருகின்றனர். இதற்கிடையில் வகை பிரித்து வழங்கும் குப்பை களை பெறுவதற்காக 34 ஆயி ரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டி களை வாங்க மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது.
மறுசுழற்சிக்கு அனுப்ப..
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மக்கள் வகை பிரித்து வழங் கும் குப்பைகளை பெற்று, மக்கும் குப்பைகளை, குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல் லாமல், அந்தந்த பகுதிகளிலேயே உருவாக்கப்பட்டுள்ள உரக் கிணறு களில் கொட்ட ஏதுவாக, ரூ.3 கோடியே 6 லட்சத்தில், 34 ஆயிரம் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளை வாங்க இருக்கிறோம். இந்த தொட்டிகள் 3 சக்கர சைக்கிளில் வைத்து கொண்டு செல்லும் வகையில் இருக்கும். பொதுமக்கள் வகை பிரித்து வழங்கும் குப்பை களை அதில் சேகரித்து, மக்கக் கூடியதைக் உரமாக மாற்றும் இடங் களுக்கும், மக்காதவற்றை மறு சுழற்சிகக்கு அனுப்பவும் வசதியாக இருக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.