தமிழகம், புதுவையில் வெப்ப சலனம்: 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

வெப்பச்சலனம் காரணமாக தமிழ கத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது தென் மேற்கு பருவமழை தீவிரமாக இல்லை. தமிழக கடலோரப் பகுதி யில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் வலு விழந்துவிட்டது. இருப்பினும் வெப்பச்சலனம் காரணமாக பல் வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வரு கிறது.

அடுத்த சில தினங்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 23 மாவட்டங்களில் சில இடங் களில் மிதமான மழை பெய்யக் கூடும். திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 8 செமீ, திருத் தணியில் 6 செமீ, வேலூர் மாவட் டம் குடியாத்தத்தில் 6 செமீ, தருமபுரி, வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், மேல்ஆலத் தூர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள் ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in