

ஐஎஸ்ஐஎஸ் போன்று ‘அன்ச ருல்லா’ என்ற புதிய தீவிரவாத அமைப்பை தமிழகத்தில் உரு வாக்க முயற்சி செய்ததாக 2 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் சிரியா உட்பட சில நாடு களில் தாக்குதல் நடத்தி ஆயிரக் கணக்கான பொதுமக்களை கொன்று குவித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 259 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றது.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நடத்திய விசா ரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாத அமைப்பை போல தமிழகத் தில் ‘அன்சருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பை சிலர் உருவாக்கி யிருப்பது தெரியவந்தது. அது குறித்து தொடர்ச்சியாக நடத்தப் பட்ட விசாரணையில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்தில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் செயல் பட்டு வருவது தெரிந்தது.
அதைத் தொடர்ந்து சென்னை மண்ணடி லிங்கி செட்டி தெருவில் ‘வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் அலுவலகத்தி லும், அதன் நிர்வாகி சையது புகாரியின் புரசைவாக்கம் வீட்டி லும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் நாகப்பட்டினத்தில் ஹசன் அலி, முகமது யூசுப்புதீன் ஆகியோரின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் 9 செல்போன்கள், 15 சிம்கார்டுகள், 7 மெமரி கார்டு கள், 3 லேப்-டாப், 5 ஹார்டுடிஸ்க், 6 பென்டிரைவ், 2 டேப்லட், 3 டிவிடிக்கள் மற்றும் சில ஆவணங் களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சையது புகாரி, ஹசன் அலி, முகமது யூசுப்புதீன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேரையும் நேற்று சென்னை கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ஹசன் அலி, முகமது யூசுப்புதீன் இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டி யன் வீட்டில் ஆஜர்படுத்தினர். இருவரையும் வரும் 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சையது புகாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின்போது, ஹசன் அலி அளித்த தகவலின்பேரில் தவுபிக் முகமது (33) என்பவருக்கும் தீவிரவாத செயல்களில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவுபிக் முகமதுவை நாகப்பட்டினம் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.