

சென்னை அரசு ஸ்டான்லி மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சவரணபவன் ராஜ கோபால் உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது என்று டாக் டர்கள் தெரிவித்தனர்.
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் உரிமை யாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் படி நீதிமன்ற உத்தரவின்படி 9-ம் தேதி தனியார் மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குற்றவியல் நீதி மன்றத்துக்கு வந்தார். ஸ்டெச்சரில் படுத்தபடி ராஜகோபால் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதி களுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரி சோதனை செய்ததில், அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனையில் வரத்தொடங்கினர். ஆனால், அவரை பார்க்க யாரும் அனுமதிக் கப்படவில்லை. அவர் சிகிச்சைப் பெறும் வார்டு உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.
இதுதொடர்பாக டாக்டர்களிடம் கேட்டபோது, “மருத்துவ மனையில் ராஜகோபால் அனு மதிக்கப்பட்டபோது இருந்த நிலையைவிட தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோச மடைந்துள்ளது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றனர்.