Published : 15 Jul 2019 06:23 AM
Last Updated : 15 Jul 2019 06:23 AM

வாராணசி சம்பூர்ணானந்த் சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் முதலாவது ‘சர்வதேச வாக்யார்த்த சதஸ்’ நிறைவு: 150-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களுக்கு கவுரவம்

வாராணசியிலிருந்து கே.சுந்தரராமன்

வாராணசி

வாராணசி சம்பூர்ணானந்த் சம்ஸ் கிருத பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச வாக்யார்த்த சதஸ் நேற்று நிறைவடைந்தது. சதஸில் பங்கேற்ற 150-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள இண் டிக் அகாடமியின் இன்டர்-குருகுலா பல்கலைக்கழக மையம், நாக்பூரில் உள்ள பாரதிய சிக்‌ஷன் மண்டல் என்ற அமைப்புடன் இணைந்து வாராணசி சம்பூர்ணானந்த் சம்ஸ் கிருத பல்கலைக்கழகத்தில் நடத் திய 3 நாள் சர்வதேச வாக்யார்த்த சதஸ் நேற்று நிறைவடைந்தது.

வேத விற்பன்னர் ராஜமுந்திரி பிரும்மஸ்ரீ வி.கோபாலகிருஷ்ண சாஸ்திரி தலைமையில் நடைபெற்ற இந்த சதஸில் இந்தியா மட்டுமின்றி பூடான், நேபாள நாடுகளைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் கலந்துகொண்டு சாஸ்திரங்களின் ஆழ்ந்த கருத்துகளை எடுத்துரைத் தனர்.

11 சாஸ்திரங்கள்

வாராணசி சம்பூர்ணானந்த் பல் கலைக்கழக துணைவேந்தர் பண்டிட் ராஜாராம் சுக்லா ஒருங் கிணைப்பாளராக செயல்பட்டு, 14 பேர் கொண்ட சிறப்புக் குழு வின் வழிகாட்டுதலில் 11 சாஸ்தி ரங்களின் அடிப்படையில் 11 அமர்வுகளை நடத்தினார். இதில், 150-க்கும் மேற்பட்ட வேத விற்பன் னர்கள் முன்னிலையில் 30 பேர் 30 தலைப்புகளில் தங்கள் விவாதங் களை முன்வைத்தனர்.

இந்த சதஸில் வியாக்கரண சாஸ்திரம், நியாய சாஸ்திரம், மீமாம்ஸா சாஸ்திரம், பிராசீன நியாய சாஸ்திரம், ஜோதிஷம், கணிதம், வைசேஷிகம், யோக சாஸ்திரம், ஆயுர்வேதம், த்வைத வேதாந்த சாஸ்திரம், அத்வைத வேத சாஸ்திரம், அத்வைத வேதாந்த சாஸ்திரம் ஆகிய சாஸ் திரத் தலைப்புகளில் அமர்வுகள் நடைபெற்றன.

நிறைவு நாளான நேற்று ஆயுர்வேதம், வேதாந்த சாஸ்தி ரங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அமர்வுகளின் நிறைவில் வேத விற்பன்னர் ஒவ்வொருவரும் தகுந்த சன்மானத்துடன் சால்வை அணிவித்து, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ராஜமுந்திரி சம்ஸ் கிருதக் கல்லூரியின் மேனாள் முதல்வரும், வாக்யார்த்த சதஸ் தலைவருமான வேத விற்பன்னர் கோபாலகிருஷ்ண சாஸ்திரி கூறும்போது, ‘‘பண்டைய நாட் களில் குருகுல முறை இருந்தது. இப்போது அது குறைந்துவிட்ட தால், இதுபோன்ற சதஸ் நிகழ்ச்சி கள் மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் அறிவாற்றலை மேலும் உயர்த்திக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு வளர்ச்சி காண்பார்கள்’’ என்றார்.

சதஸில் கலந்துகொண்ட நேபாள நாட்டைச் சேர்ந்த ல‌ஷ்மண சாஸ் திரி கூறும்போது, ‘‘நான் இந்தியா வருவது இதுவே முதல்முறை. என் தாத்தா, தந்தை அனைவரும் சம்ஸ்கிருத வித்வான்கள். அவர்கள் வழியில் நானும் சம்ஸ்கிருதம் பயின்று, ஆச்சார்யா பட்டம் பெற்றேன். வாராணசி சதஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வேத விற்பன்னர்கள் கூடி யுள்ள சபையில் எனது வாதத்தை முன்வைப்பதால், அந்த சாஸ்தி ரத்தில் உள்ள முக்கிய அம்சங்கள், ஆழ்ந்த கருத்துகளை உணர முடிகிறது’’ என்றார்.

பல்கலைக்கழகத்தின் பாணினி அரங்கத்தில், தனுர்வேத ராஜ்ய சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேத குரு குலங்களுக்கு பாடத்திட்ட உரு வாக்கம் குறித்த 3 நாள் பயில ரங்கமும் நேற்று நிறைவடைந்தது.பண்டைய நாட்களில் குருகுல முறை இருந்தது. இப்போது அது குறைந்துவிட்டதால், இதுபோன்ற சதஸ் நிகழ்ச்சிகள் மாணவர்கள் மத்தியில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x