

திருச்சிக்கு இன்று வருகை தரும் அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதை தமிழக காவல்துறை தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவில், ‘தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல் இருப்பதால் திருச்சிக்கு வரும் ராகுல் காந்திக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவரிடம் கடந்த 21-ம் தேதி மனு கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, ராகுல் காந்தி திருச்சி வரும்போது அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் சுப்பையா வாதிடும்போது, ‘‘ராகுல்காந்தி நிகழ்ச்சிகளில் யார், யாரெல் லாம் பங்கேற்கின்றனர் என்ற பட்டியல் இன்னும் தரப்பட வில்லை’ என்று தெரிவித்தார்.
நீதிபதி சத்தியநாராயணன் பிறப்பித்த உத்தரவு: ராகுல் திருச்சி வரும்போது உரிய பாது காப்பு அளிக்கப்படுகிறதா என்பதை காவல்துறைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும்.
ராகுல் காந்தி கலந்து கொள்ளும் கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொள்வர் என்று திருச்சி காவல்துறையினரிடம் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் சட்டம், ஒழுங்கு இயல்பாக இருக்கும்.
ராகுலுக்கு இசட்பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டி ருப்பதால் சிறப்பு காவல் துறை யினர் பாதுகாப்பு அளிப்பர். அத்துடன் மாநில காவல்துறை யினரும் உரிய பாதுகாப்பு அளிப்பர். இவ்விஷயத்தில் எந்த குறைபாடும் இருக்காது என அரசு வழக்கறிஞர் தெரி வித்ததை பதிவு செய்து கொண்டு வழக்கு முடித்து வைக் கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சத்தியநாராணன் உத்தர விட்டார்.