

மக்கள் நலத் திட்டங்களை நிறை வேற்ற மத்திய அரசுக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களு டன் பிரதமர் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பேசுவதற்கு போதிய நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறி முதல்வர்கள் மாநாட்டி லிருந்து ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். ஆனால், தற்போது, பாஜக ஆட்சியில் மாநில முதல்வர் களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படு கிறது. முக்கியப் பிரச்சினைகளில் மாநில முதல்வர்களின் கருத்து களை கேட்ட பிறகே பிரதமர் முடி வெடுக்கிறார். இதற்காக மாநில முதல்வர்கள் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில் நிலம் கைய கப்படுத்தும் சட்டத் திருத்தம் தொடர்பாக நடைபெற்ற கூட் டத்தை காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களைப் போல ஜெய லலிதாவும் புறக்கணித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. கூட்டத்தில் கலந்துகொண்டு தனது நிலைப் பாட்டை முதல்வர் தெரிவித்திருக்க வேண்டும்.
இந்தச் சட்டத்தில் விவசாயி களுக்கு எதிரான அம்சங்கள் இருப் பதாக நினைத்தால் பிரதமரிடம் நேரில் தெரிவித்திருக்கலாம். அதற்கான வாய்ப்பை நழுவ விட்டுவிட்டு குறை சொல்வதால் எந்தப் பலனும் இல்லை. பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்தது விவசாயிகள் மீது தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், அரசியல் காரணங் களுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை எதிர்க்கின்ற னர். அதையே தமிழக அரசும் செய்யக் கூடாது. எல்லோரும் எதிர்ப்பதால் நாங்களும் எதிர்ப் போம் என்றால், எல்லோரும் எதிர்த் தும் டாஸ்மாக் மதுக்கடைகளை ஏன் மூட வில்லை? தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறை வேற்ற மத்திய அரசுக்கு அதிமுக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.