Published : 01 Jul 2015 10:59 AM
Last Updated : 01 Jul 2015 10:59 AM

சென்னையில் ஹெல்மெட் பழுது பார்க்க ஆட்கள் இல்லை

சென்னையில் ஹெல்மெட் பழுது பார்க்கும் டெக்னீஷியன்கள் அனைவரும் ஹெல்மெட் விற்பனையில் இறங்கியதால் தற்போது பழுது பார்க்கும் ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஹெல்மெட் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் விற்பனை சூடு பிடித்து உச்சத்தில் இருந்து வருகிறது. ஆயிரம் விளக்கு பகுதியில் சில கடைகளில் ரமலான் நோன்பையொட்டி மாலை நேரங்களில் ஹெல்மெட் கடைகள் மூடப்பட்டு, இரவு 7 மணிக்கு திறக்கப் படும் என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக் களும் கடை திறக்கும் வரை பொறுமையாக காத்திருந்து ஹெல்மெட்களை வாங்கிச் செல்கின்றனர். அப்பகுதியில் போதிய இருப்பு இல்லாததால் சில கடைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தை விட தற்போது ஹெல்மெட் விலை இரு மடங்காகியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பழுத டைந்துள்ள நிலையில் பயன்படுத் தாமல் வீட்டில் இருக்கும் ஹெல் மெட்களை நடுத்தர வருவாய் மக்கள் சிக்கன நடவடிக்கையாக, பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தும் வேலையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஹெல்மெட் பழுது பார்க்கும் கடைகள் எதுவாக இருந்தாலும், ‘‘ஒரு வாரத்துக்கு பழுது பார்க்க முடியாது. தற்போது ஹெல்மெட் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்’’ என்று கூறி பொதுமக்களை கடைக்காரர்கள் திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

இதுபற்றி ஹெல்மெட் பழுது பார்க்க வந்திருந்த அயனாவரத் தைச் சேர்ந்த சந்திரனிடம் கேட்ட போது, ‘‘வழக்கமாக ஒரு வாரத் தில் பழுது பார்த்து கொடுப்பார் கள். ரூ.200 வரை கட்டணம் வசூலிப்பார்கள். ஹெல்மெட் தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை சாதகமாக பயன் படுத்திக்கொண்ட இவர்கள், கடந்த வாரம் பழுது பார்க்க வந்தபோது ரூ.400 செலவாகும், ஒரு மாதம் கழித்துதான் டெலிவரி கொடுக்க முடியும் என்றனர். இப்போது பழுது என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர். ஹெல்மெட் விலை வேறு தற்போது அதிகரித்துவிட்டது. இந்நிலையில் புதிய ஹெல்மெட் வாங்குவதை தவிர வேறு வழி தெரியவில்லை’’ என்றார்.

இதுதொடர்பாக, ஹெல்மெட் வியாபாரி குமாரி என்பவரிடம் கேட்டபோது, ‘‘ஹெல்மெட் பழுது பார்க்கும் டெக்னீஷியன்கள் எல்லாம் தற்போது வியாபாரிகளாகிவிட்டனர்.

ஒரு வாரத்துக்கு இந்த நிலை நீடிக்கும். சென்னை மக்கள் ஹெல் மெட் என்றாலே ஆயிரம் விளக்கு பகுதிக்கு வந்துவிடுகின்றனர். அம்பத்தூர், புளியந்தோப்பு உள் ளிட்ட பல்வேறு பகுதியில் ஹெல் மெட் கடைகள் அதிகம் உள்ளன. அப்பகுதியில் பழுது பார்ப்போரும் உள்ளனர். அவர்களை பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x