

சென்னை சென்ட்ரலில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பெங்களூரிலும் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். போலி ஆவணங்கள் கொடுத்து தட்கல் டிக்கெட் வாங்கிப் பயணம் செய்த நபருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உண்டா என்றும் தீவிர விசாரணை நடக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத் துக்கு வியாழக்கிழமை காலை வந்தடைந்த பெங்களூர் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித் தன. இதில் ஸ்வாதி என்ற இளம் சாப்ட் வேர் பொறியாளர் பலியானார். 14 பேர் காய மடைந்தனர். குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழக சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி.க்கள் விஜயகுமாரி, அன்பு ஆகியோரது நேரடி மேற்பார்வையில் இந்தக் குழுவினர் செயல்படுகின்றனர்.
சென்ட்ரலுக்கு ரயில் வந்த பிறகு, மர்ம நபர்கள் பெட்டியில் ஏறி குண்டு வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்த 9-வது நடைமேடையில் உள்ள கேமராக்கள், மற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். சுமார் 80 கேமராக்க ளில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சந்தேகத் துக்கிடமான நபர்களை தனியாக வகைப்படுத்தி, அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சென்னையில் இருந்து எஸ்பி. அன்பு தலைமையிலான தனிப் படை போலீஸார் வெள்ளிக் கிழமை காலையில் பெங்களூர் சென்றனர்.
பெங்களூரில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டி ருந்த நடைமேடை யில் பொருத் தப்பட்டிருக்கும் கேமராக்களை யும் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் சந்தேக நபர்கள் யாராவது சிக்கினால் அவர்களையும் கண்டறிந்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த 8 பேர் யார்?
இதற்கிடையே, போலி ஆவணங்கள் கொடுத்து பெங்களூ ரில் ஒருவர் தட்கல் டிக்கெட் பெற்று இந்த ரயிலில் பயணம் செய்துள்ளார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் யார் என்பது பற்றியும் விசாரித்து வருகின்றனர். மேலும், காட் பாடியில் இருந்து பயணம் செய்வதற்காக இந்த ரயிலில் 8 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அந்த 8 பேருமே பயணம் செய்ய வில்லை. இதுபற்றியும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.