

பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம். உள்ளிட்ட 9 பட்டப்படிப் புகளுக்கு 19,740 விண்ணப் பங்கள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளான பி.எஸ்சி. (நர்ஸிங்), பி.பார்ம்., பி.பி.டி., பி.ஏ.எஸ்.எல்.பி. (செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமேட்ரி, பி.ஓ.டி. ஆகிய படிப்புகள் உள்ளன. தமிழகம் முழுவதும் 23,500 விண்ணப்பங்கள் விற்பனையாகின.
கடைசி நாளான நேற்று மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட 19,740 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது