

சென்னையில் உள்ள மேன்சன், தங்கும் விடுதிகளுக்கு புதிதாக சொத்து வரி நிர்ணயம் செய்ய மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேன்சன், விருந்தினர் மாளிகை, விடுதிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகியவற்றுக்கு இது வரை வாடகைதாரர் குடியிருப்பு என்ற அடிப்படையில் சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
வாடகைதாரர் குடியிருப்பாக இல்லாமல், வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதால் இந்தக் கட்டிடங்களுக்கு ‘வாடகைதாரர் வணிக பயன்பாடு’ என்ற அடிப் படையில் சொத்து வரி நிர்ணயம் செய்ய அனுமதி கோரி சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் மாநகராட்சிக்கு வருவாயும் அதிகரிக்கும் என்று கூறி, மாமன்ற உறுப்பினர்கள் பலர் தீர்மானத்தை வரவேற்றனர். இதையடுத்து, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.