

குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் துப்புரவு தொழி லாளர்களுக்கு தங்கம் வழங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
குப்பை மேலாண்மையில் குப்பைகளை தரம் பிரிப்பது மிக முக்கியமானதாகும். இதற்கு மாநகராட்சி பல முயற்சிகளை எடுத்த போதிலும் எதுவும் வெற்றியடையவில்லை. வீடுகளிலி ருந்து குப்பையை வெளியேற்றும் போதே பிளாஸ்டிக்கை பிரித்தெடுப் பதை ஊக்குவிக்க, மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி பிளாஸ்டிக் குப்பை களை பிரித்து வழங்கும் குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு டோக்கன் வழங்கப்படும். ஒவ்வொரு வார்டிலும் 500 கிலோ பிளாஸ்டிக் சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த வார்டில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு அரை கிராம் தங்கம் வழங்கப்படும். மேலும் ஐந்து பேருக்கு கைக்கடிகாரங்கள் வழங் கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் மாநகராட்சி அறிவித் தது. ஒரு சில வார்டுகளில் நடை முறைப்படுத்தப்பட்டாலும் மாநக ராட்சி எதிர்பார்த்த அளவு இத் திட்டம் வரவேற்பை பெறவில்லை.
எனவே தற்போது பொதுமக் களுக்கு பதிலாக துப்புரவு தொழி லாளர்களுக்கு தங்கம் வழங்கு வது பற்றி மாநகராட்சி யோசித்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தங்கம் தரப்படும் என்று அறிவித்த போதிலும் பொதுமக்கள் தங்கள் வீட்டு குப்பைகளை வீடுகளிலேயே தரம் பிரிக்க பழகவில்லை. இந்நிலையில் துப்புரவு தொழிலாளர்கள் பலர் பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சி செய்யும் கடைகளில் கொடுத்து காசு பெறுவதற்காக அவற்றை பிரித்தெடுத்து வருகின்ற னர். இதன்படி இவர்கள் மறைமுக மாக நமது குப்பை மேலாண்மைக்கு உதவி வருகின்றனர்.
பொதுமக்கள் தினமும் தங்கள் வீடுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் குப்பையை விட, துப்புரவு தொழிலாளர்களிடம் நாளொன்றுக்கு அதிக பிளாஸ்டிக் குப்பை கிடைக்கும். எனவே பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு தங்கம் வழங்க திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக மணலி மண்டலத்தில் இதை செயல்படுத்தவுள்ளோம்.