

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பொறியியல் கலந்தாய்வில் 6 நாட்களில் 22,088 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
6-வது நாளான நேற்று 5,520 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 1375 பேர் கலந்தாய் வுக்கு வரவில்லை. கலந்தாய் வில் கலந்துகொண்டு கல்லூ ரியை தேர்வு செய்த 4,120 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ள தாக மாணவர் சேர்க்கை செய லாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.