

சிவகங்கை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை அடித்துக் கொலை செய்த மர்மகும்பல் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை தாலுகா கிளாதரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி முத்தம்மாள்(50). இவர் தனது தாயார் சங்கியம்மாள்(70), மகன்கள் பொன்னுச்சாமி(25), ராஜா(22), சரவணக்குமார்(20) ஆகியோருடன், கிளாதரி அருகே தனி குடிசை வீட்டில் வசித்தனர். இதில், பொன்னுச்சாமி பி.இ. பொறியியலும், ராஜா ஐ.டி.ஐ. வெல்டர் பயிற்சி முடித்துத்துள் ளனர். சரவணக்குமார் ராணுவத் தில் சேர்ந்து ஹைதராபாத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு முத்தம்மாளின் வீட்டுக்கு வந்த மர்மகும்பல் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சங்கியம்மாள், முத்தம்மாள், பொன்னுச்சாமி, ராஜா ஆகி யோரை கம்பால் தாக்கியுள்ள னர். இதில் மயக்கமடைந்த 4 பேர் களையும் மாட்டுக் கொட்டகையில் கொண்டு வந்து போட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மர்மக் கும்பல் மாட்டுக்கொட்டகையை தீயிட்டு எரித்ததாக சொல்லப்படு கிறது. இதில் 4 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்த மதுரை டிஐஜி (பொறுப்பு) ஆனந்த்குமார் சோமானி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி. எம்.துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்கே வந்து பிரேதப் பரிசோதனை நடத்தினர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சொத்துக்காக நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதாக என பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.