Published : 16 Jul 2015 08:40 AM
Last Updated : 16 Jul 2015 08:40 AM

சடலத்தை எரியூட்டாமல் ‘அஸ்தி’ கொடுத்ததால் மயானம் சூறை

திருச்சி எடமலைப்பட்டிப் புதூரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி பாப்பம்மாள் இறந்ததையடுத்து அவரது உடலை எரியூட்டுவதற்காக கருமண்டபத்தில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மயானத்துக்கு நேற்று உறவினர்கள் கொண்டு வந்தனர்.

அங்கு இருந்த ஊழியர்களிடம் சடலத்தை ஒப்படைத்துவிட்டு, அஸ்திக்காக காத்திருந்தனர். சுமார் 10 நிமிடங்களில் எரிவாயு தகன மேடை ஊழியர் குமார், அஸ்தியைக் கொண்டு வந்து மூதாட்டியின் மகன் ராஜசேகரிடம் ஒப்படைத்தார். அப்போது, அஸ்தி சூடாக இல்லாததை உணர்ந்த ராஜசேகர், அதுகுறித்து கேட்டார். உறவினர்களும் கேள்வி எழுப் பினர். இதையடுத்து எரிவாயு தகன மேடை அறைக்கு அருகிலிருந்த ஒரு ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, அங்கு பாப்பம்மாளின் சடலம் தரையில் கிடத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

உடலை தகனம் செய்யா மலேயே அஸ்தியைக் கொடுத்த தால் ஆத்திரமடைந்த ராஜசேகரின் உறவினர்கள், எரிவாயு தகன மேடை மற்றும் அங்குள்ள அலுவலகத்தை அடித்து நொறுக் கினர் இதையடுத்து, ராஜசேகர் உள்ளிட்டோர் எரிவாயு தகன மேடைக்கு அருகிலிருந்த அறைக் குள் சென்று பார்த்தபோது, அங்கு எரிக்கப்படாமல் மற்றொரு சடலமும் மூட்டையாகக் கட்டி வைத்திருந்ததும் தெரிந்தது.

தகவலறிந்து கன்டோன்மென்ட் போலீஸாரும், மாநகராட்சி அலு வலர்களும் வந்து விசாரணை நடத்தினர். பின்னர், மூதாட்டி பாப்பம்மாளின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சடலத்தை ஓயாமரி எரிவாயு தகன மேடைக்கு எடுத்துச் சென்று எரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆணையர் விளக்கம்

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமியிடம் கேட்டபோது, “சம்பவ இடத்தில் ஏ.சி. இருக்கிறார். அவர் உங்களுக்கு தகவல் கொடுப்பார். அங்கு நிலவும் பிரச்சினை முடிந்த பிறகே அவர் எனக்கு தகவல் தருவார். சடலம் ஓயாமரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறா என்று எனக்கு தெரியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x