

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிந்த இலங்கை தமிழர்கள் 4 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
திருச்சி மத்திய சிறை வளாகத் தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கவைக்கப்பட் டிருந்த 19 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வலியுறுத்தி சில மாதங்களாக உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடு பட்டு வந்தனர். இவர்களில் 4 பேரை விடுதலை செய்து தமிழக அரசு கடந்த 11-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
அதனடிப்படையில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஈழ நேரு, மதுரை மாவட்டம் திருவாதவூர் முகாமைச் சேர்ந்த உமாரமணன், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முகாமைச் சேர்ந்த ரமேஷ், சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஜெகன் (எ) ஸ்ரீஜெயன் ஆகிய 4 பேர் நேற்று மாலை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களை குடும்பத்தினர், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு, மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ஆதிநாராயணமூர்த்தி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன்பின் ஈழ நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் செய்யாறு முகாமில் 9 பேர், திருச்சி முகாமில் 19 பேர் என 28 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் செய்யாறிலிருந்த 6 பேர், திருச்சியிலிருந்த 4 பேர் என 10 பேரை விடுதலை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுதலையை பெற நாங்கள் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது.
சிறப்பு முகாமுக்குள் எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களும் உடல் நலக்குறைவு, மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடும் பத்தினருடன் வாழ முடியாமல் அவதிப்படுகின்றனர். அவர்களை யும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்றார்.