பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது: முதல் நாளில் 1,256 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது: முதல் நாளில் 1,256 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
Updated on
2 min read

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று தொடங் கியது. முதல் நாளில் 1,256 மாண வர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந் தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2,015 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந் தனர். இதில் 757 பேர் பங்கேற்க வில்லை. கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 198.25 வரை பெற்றிருந் தவர்களுக்கு நேற்று கலந்தாய்வு நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்கிய கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார். கலந்தாய் வில் பங்கேற்ற 10 மாணவர் களுக்கு பொறியியல் படிப்புக் கான ஒதுக்கீட்டு ஆணையை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் உயர் கல்வித் துறை செயலாளர் அபூர்வா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம், தமிழ்நாடு பொறி யியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட பொறியியல் தர வரிசைப் பட்டியலின்படி 23 பேர் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந்தனர். அவர்களில் 7 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்து விட்டதால் நேற்றைய கலந்தாய் வுக்கு வரவில்லை. மீதமுள்ள 16 பேரில் 9 பேர் நேற்றைய கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்களில் ஒரு மாணவர் தவிர மற்ற அனைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தை தேர்வு செய்தனர். ஒரு மாணவர் மட்டும் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி. பொறி யியல் கல்லூரியை தேர்வு செய்தார்.

நேற்று தொடங்கிய பொது கலந்தாய்வு இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் வீதம் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் இது பற்றி கூறும்போது, “இந்த ஆண்டு மொத்தம் 2 லட்சத்து 430 பொறியியல் இடங்கள் உள்ளன. சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆண்டு புதிதாக கலந்தாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் நடத்தப்படும் இந்த கல்லூரியில் 30 இடங்கள் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன” என்றார்.

6 திரைகள்

கலந்தாய்வின் நிலவரத்தை மாணவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் 6 பெரிய திரைகள் வைக்கப்பட்டுள் ளன. கலந்தாய்வு முடித்து ஒதுக்கீடு ஆணைகளை பெற்று வரும் மாண வர்கள் கலந்தாய்வு அரங்குக்கு அருகில் உள்ள அரங்கில் மருத்துவ தகுதி சான்றிதழ் பெற ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டண ரசீதைப் பெற்று கொண்ட பிறகு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவர்கள் சோதித்து பார்த்து மாணவர்களுக்கான சான்றிதழை வழங்குவார்கள்.

குடிநீர், கழிப்பறை வசதி

கலந்தாய்வின்போது மாணவர் கள், அவர்களின் பெற்றோர்கள் என தினமும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழக வளாகத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு உணவகங்கள் மற்றும் தற் காலிக குளியலறைகள் அமைக் கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்களின் பாதுகாப்புக்காக 100 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

8 வங்கி அரங்குகள்

பொறியியல் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை பெற்ற மாணவர்கள் உட னுக்குடன் கல்விக் கடன் பெறு வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதற்காக இந்தியன் வங்கி, கனரா வங்கி, தேனா வங்கி உள்ளிட்ட எட்டு வங்கி கள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கள் அரங்குகளை அமைத் துள்ளன.

நேற்றைய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த 2015 பேரில் 1,256 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான இன்று 198க்கும் 196.25க்கும் இடைப்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்றுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in