

எச்ஐவி வைரஸை விட ஹெப்படைட் டிஸ் வைரஸ் 100 மடங்கு அபாயகர மானது என்று ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை கல்லீரல் மருத் துவத் துறை தலைவர் கே.நாராயண சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சேமித்து, பின்னர் சக்திகளாக மாற்றி மற்ற உறுப்புகளை இயக்கும் முக்கியமான பணியை கல்லீரல் செய்து வருகிறது. இதை ஹெப்படைட்டிஸ் பி, ஹெப்படைட் டிஸ் சி ஆகிய வைரஸ்கள் தாக்கு கின்றன. இதை கல்லீரல் அழற்சி நோய் என்கிறோம். இந்த வைரஸ் கள் எச்ஐவியை போலவே ரத்தம், உடலுறவு மூலமாகவும், தாயிடமி ருந்து குழந்தைக்கும் தொற்றுகிறது. தற்போது அதிக அளவில் தாயிட மிருந்து குழந்தைக்கு தொற்றுகிறது. இதைத் தடுக்க குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின் றன. இந்த வைரஸ்கள், எச்ஐவியை விட 100 மடங்கு அபாயகரமானவை. உடலுக்கு வெளியில் இந்த வைரஸ் உள்ள ரத்தம் சிந்தினால் 7 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். எச்ஐவி வைரஸ்கள் 10 விநாடிகளில் இறந்து விடும்.
இந்த வைரஸ்கள் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் வரை எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது. எதிர்ப்பு சக்தி குறையும்போது கல்லீரலைத் தாக்கி, புற்றுநோயை ஏற்படுத்தி மரணத்தை விளைவிக்கும். ஏதாவது காரணங் களுக்காக ரத்த பரிசோதனை செய் யப்படும் நேரங்களிலோ, வேறு நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வரும்போதோ இது கண்டுபிடிக் கப்படுகிறது.
கல்லீரல் அழற்சி நோயால் உலக அளவில் தினமும் 4 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்களிடம் போதிய விழிப் புணர்வு இல்லை. அதனால் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் விதமாக ஜூலை 28-ம் தேதியை உலக கல்லீரல் அழற்சி விழிப் புணர்வு தினமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நாள், ஹெப் படைட்டிஸ் வைரஸை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற புளும்பர்க் என்பவரின் பிறந்த தினமாகும்.
தமிழக அரசு சார்பில், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மருத்துவத்துறை ஏற்படுத் தப்பட்டுள்ளது. நம் மருத்துவமனை யில் வெளிநாடுகளில் கல்லீரல் நோய் சிகிச்சையில் எந்த புதுமை புகுத்தப்பட்டாலும், உடனுக்குடன் இங்கு அமலுக்கு வந்துவிடுகிறது. கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப் பட்ட பலர் முற்றிலுமாக குணமடைந் துள்ளனர். பக்க விளைவுகள் இல்லாத மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.தமிழகத்தில் தனியார் மருத்துவமனையான வேலூர் சிஎம்சி மருத்துவமனை தவிர வேறு எங்கும் இத்துறை இல்லை.
உலக கல்லீரல் அழற்சி விழிப் புணர்வு தினமான ஜூலை 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் விழிப் புணர்வு உறுதிமொழி ஏற்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம். அன்றைய தினம் இம்மருத் துவமனையில் கல்லீரல் அழற்சி நோய் தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மருத்துவமனை முதல்வர் ஆர்.விமலா உடனிருந்தார்.