

‘பாமக சார்பில் மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்’ என அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே பாமக சார்பில் மது ஒழிப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாமக மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்காக இருக் கும். மதுவை அரசே விற்பனை செய்வது தவறான செயல்.
மதுக்கடைகளை மூட வேண் டும். தமிழகத்தில் மதுவினால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக் கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மதுவினால் அதிகம் சாலை விபத்து, உயிரிழப்பு ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களும் குடிப்பழக்கத்துக்கு அடிமை யாகின்றனர்.
தமிழகத்துக்கு மதுவை கொண்டு வந்தது திமுக. அதை பிரபலப்படுத்தியது அதிமுக. பாமக ஆட்சிக்கு வந்தால் தேவையற்ற இலவச திட்டங்கள் கைவிடப்படும். மக்களுக்கு தேவையான இலவச கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகியவற்றுக்கு முன் னுரிமை வழங்கப்படும்’ என்றார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலி யுறுத்தி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும். சட்டப்பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரலை செய்வதற்கு போதுமான நிதி இல்லை என அரசு கூறுவது கேலிக்கூத்தானது’ என்றார் அவர்.
மாநில பொது செயலாளர் வடிவேல் ராவணன், மாநில துணை பொது செயலாளர் உச்சல்சிங், மாநில மகளிரணி செயலாளர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.