

போரூர் ஏரியில் சாலை அமைக்கும் பணிக்கு தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு இடைக்கால தடை விதித்துள் ளது. இது தொடர்பாக பொதுப் பணித்துறை அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்க றிஞர் வி.மேகநாதன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் னிந்திய 2-ம் அமர்வில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது: சென்னையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக போரூர் ஏரி விளங்கி வருகிறது. செம்பரம் பாக்கம் ஏரி நிரம்பி வெளியேறும் நீர் போரூர் ஏரியில் சேமிக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில், 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், 330 ஏக்கர் பரப்பளவுக்குதான் பொதுப்பணித்துறையிடம் ஆவ ணங்கள் இருக்கின்றன. மீதம் 470 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளது. விவசாயத்துக்கு பயன்படுத்தப் பட்டு வந்த இந்த ஏரியின் ஒரு பகுதியை தனியார் அறக்கட்ட ளைக்கு அரசு வழங்கியுள்ளது என்ற செய்திகள் வெளிவந்துள்ளன.
தற்போது இந்த ஏரியின் நடுவில் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது, நீர்நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, சாலை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அங்கு சாலை அமைக்க கொட்டப்பட்ட மண் மற்றும் கட்டிடக் கழிவுகளை அகற்ற வேண்டும். ஏரியை புனரமைத்து சுற்றுச்சூழலை காக்க வேண்டும்.
இவ்வாறு மனுதாரர் கோரியிருந் தார்.
இம்மனுவை அமர்வின் நீதித் துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.ராஜ சேகர், ‘‘தனியார் நிறுவனம் கட்டுமானப் பணி தொடங்குவதற்கு வசதியாகவே சாலை ஏற்படுத்தப் படுகிறது. இதை உடனடியாக தடுக்காவிட்டால் நீர்நிலை அழிக்கப் பட்டுவிடும்’’ என்று வாதிட்டார்.
பொதுமக்களுக்கு சொந்தமான நீர்நிலைகளை தனியாருக்கு எப்படி அரசு வழங்க முடியும் என்று அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து, ‘‘போரூர் ஏரியில் சாலை அமைக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும்வரை போரூர் ஏரியில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் அடுத்த விசாரணையின்போது விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.