Published : 13 May 2014 11:00 AM
Last Updated : 13 May 2014 11:00 AM

அறநிலையத்துறை சொத்துக்கள் விவரம் வெளியீடு: 7 மாவட்ட விவரங்கள் வெளியாகவில்லை

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் முழுவதும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்த போதிலும் காஞ்சிபுரம், வேலூர் உள்பட 7 மாவட்டக் கோயில்களின் சொத்து விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 36 ஆயிரத்து 488 கோயில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்தபடி 58 திருக் கோயில்கள் உள்ளன.

இவை தவிர, 17 சமணக் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமாக நன்செய், புன்செய், மானா வாரி என்று 4 லட்சத்து 78 ஆயிரத்து 348 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் 22,600 கட்டிடங்கள், 33,665 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதுதவிர 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேருக்கு விவசாய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.58.68 கோடி வருவாய் கிடைக்கிறது.

சமூக விரோதிகள் மோசடி

தமிழகத்தில் பல கோயில்களின் சொத்து விவரங்கள் சரியானபடி பராமரிக்கப்படாததால் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் சிலர், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பது, போலியாக பட்டா போட்டு விற்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து கோயில் சொத்துக்களின் விவரங்கள் திரட்டப்பட்டு அதை இணைய தளத்தில் வெளியிடுமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோயில் சொத்துக்களின் விவரம் முழுமையாக திரட்டப் பட்டது. அரியலூர், சென்னை, கரூர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.

அடுத்ததாக சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருநெல் வேலி, மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களின் சொத்து விவரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து அவையும் இணையதளத்தில் வெளியிடப் பட்டன. ஒவ்வொரு கோயிலின் சொத்து மதிப்பு, அதன் தற்போதைய நிலை, குத்தகை எடுத்தி ருப்பவர் விவரம் ஆகிய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

விரைவில் 7 மாவட்ட விவரங்கள்

‘கோயில் நகரம்’ என்று போற் றப்படும் காஞ்சியில் ஏராளமான கோயில்கள் உள்ளன. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் சொத்து விவரங்கள் இதுவரை இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அதேபோல சேலம், ஈரோடு, வேலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங் களின் கோயில் சொத்து விவரங்களும் இதுவரை வெளியிடப் படவில்லை.

அந்த மாவட்டங்களில் எவ்வளவு சொத்து மதிப்பு உள்ளது என்பது வெளிச்சத்துக்கு வராததால் இதை சமூக விரோதி கள் தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி யான அளவில் சொத்துக்கள் உள்ளன. அவற்றை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

முழு விவரங்களும் பெறப்பட்ட பிறகு, இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் வெளியி டப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x