

நாடுமுழுவதும் 100 அரசு பொது மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப் படும். ஒவ்வொரு மருத்துவக்கல் லூரியிலும் 100 எம்பிபிஎஸ் மாண வர்கள் சேர்க்கப்படுவார்கள். காரைக்காலில் ஜிப்மர் கிளை அமையும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தெரிவித்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா பங்கேற்று 418 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
மருத்துவக் கல்வியில் நாடு முன்னேறி வந்தாலும் தற்போது 7.4 லட்சம் மருத்துவர்களே உள்ள னர். இது மக்கள் தொகை அடிப் படையில் 1674:1 என்ற விகிதத்தில் உள்ளது. உலக சுகாதார நிறுவன கணக்கின்படி 1000:1 என்ற விகிதத் தில் மருத்துவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். அதன்படி 14 லட்சம் மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
அதேபோல் செவிலியர்கள் நமது நாட்டில் 2.6 லட்சம் பேரே உள்ளனர். உலக சுகாதார நிறுவனத் தின்படி ஒரு மருத்துவருக்கு மூன்று செவிலியர் என்ற விகிதத் தில் இருக்க வேண்டும். இந்த குறைபாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருத்துவக் கல்லூரி வசதியே இல்லாத 100 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக 50 அரசு மருத்துவமனைகளும், இரண்டாவது கட்டத்தில் அதே எண்ணிக்கையிலான மாவட்ட அரசு மருத்துவமனைகள் தரம் உயரும். ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் 100 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதன் மூலம் 10,000 மருத்துவர்கள் கூடுதலாக நமக்கு கிடைப்பர்.
காரைக்கால் பிராந்தியத்தில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கிளை விரைவில் ஏற்படுத்தப்படும். இதற் கான ஆணை பிறப்பிக்கப் படும்.
நோய்களை வருமுன் தடுக்கும் வகையில் சர்வதேச பொதுச் சுகாதார பள்ளியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது. ரூ.456 கோடி செலவில் பழைய கட்டிடங்களை நவீனமயமாக்கல், ஊழியர் குடியிருப்பு போன்றவை கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே ரூ.375 கோடி செலவில் விடுதிகள், குழந்தைகள், பெண்கள் சிகிச்சை பிரிவு போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.