

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவருக்கு போலி பாஸ் போர்ட், விசா தயாரித்துக் கொடுத்த சென்னை பிரமுகர் மலேசியா வுக்கு தப்பிவிட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கை யாழ்ப்பாணம் கொடி காமத்தைச் சேர்ந்தவர் குமரகுரு.விடுதலைப் புலிகள் இயக் கத்தைச் சேர்ந்த இவர், 21.1.2014-ல் சுற்றுலா விசாவில் சென் னைக்கு வந்தார். பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பிச் செல்லவில்லை.
தப்பி செல்ல திட்டம்
குமரகுரு மலேசியா வழியாக சுவிட்சர்லாந்து தப்பிச் செல்லத் திட்டமிட்டார். இதற்காக கடந்த 26-ம் தேதி திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் தனியார் விமானத்துக்கு பயணச் சீட்டு பெற் றிருந்த இவரை, திருச்சி விமான நிலைய போலீஸார் கைது செய்தனர். இவருக்கு உதவியதாக திருவாடனை வழக்கறிஞர் திருமுருகன்(37), போலி பாஸ் போர்ட், விசா பெற ஏற்பாடு செய்ததாக சென்னை மயிலாப்பூர் டிராவல் ஏஜென்ட் முபாரக் அலி (43) ஆகியோரையும் கைது செய்தனர்.
முபாரக் அலியிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அன்சாரி தலைமையில் செயல் படும் கும்பல், பணத்துக்காக ஏராளமான நபர்களுக்கு போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து கொடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது தெரிய வந்தது.
தனிப்படை அமைப்பு
அன்சாரியை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர்கள் உமா சங்கர், ரமேஷ் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படையினர் சென்னை சென்று விசாரணை நடத்தினர். ஆனால், கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் அன்சாரி மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது.
இதுபற்றி போலீஸ் அதி காரிகள் கூறியதாவது: திருவல்லிக் கேணியைச் சேர்ந்த அன்சாரியின் உண்மையான பெயர் நைனா முகமது. இவர் மூலம்தான் பலர், போலி பாஸ்போர்ட், விசா பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக விசாரணையின் போது முபாரக் அலி தெரிவித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த குமரகுரு பயணம் செய்ய இருந்த மலேசியா செல்லும் விமானத்தில், மொத்தம் 4 பேருக்கு அன்சாரி போலி விசா தயாரித்துக் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடங்குவார்.
குமரகுருவும், முபாரக் அலியும் திருச்சியில் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதை அறிந்ததும், அன்றே அன்சாரி மலேசியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி விசாரித்து வருகிறோம். மேலும், சென்னை போலீஸாரின் உதவியுடன் அவரது கும்பலில் உள்ள மற்றவர்களைப் பிடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விசாரணை முடிந்த பிறகே, அன்சாரியை இவ்வழக்கின் குற்ற வாளியாக சேர்க்க முடியும்” என்றனர்.