Published : 26 Jul 2015 09:47 AM
Last Updated : 26 Jul 2015 09:47 AM

குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது: 1,241 காலியிடங்களுக்கு 6 லட்சம் பேர் போட்டி

தமிழகம் முழுவதும் 1,511 மையங் களில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு இன்று நடக்கிறது. 1,241 காலிப்பணியிடங் களுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக அரசுத் துறைகளில் துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் உதவியாளர் உட்பட 18 விதமான பதவிகளில் 1,241 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 10 முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 1,511 மையங்களில் 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பட்டதாரிகள் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி, ரோசரி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 199 மையங்களில் 64 ஆயிரத்து 309 பேர் தேர்வு எழுத இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

முறைகேடு நடக்காமல் தடுக்கும் வகை யில் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சி யர்கள், வட்டாட்சியர்கள் தலைமை யில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள் ளன. இவர்கள் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்வர்.

தற்போது நடைபெறுவது முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு ஆகும். இதிலிருந்து, ஒரு காலியிடத்துக்கு 10 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர் வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். அதில் வெற்றி பெறு வோர் நேர்காணலுக்கு அழைக்கப்படு வர். இறுதியாக, மெயின் தேர்வு மதிப் பெண், நேர்காணல் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணி நியமனம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x