Published : 08 Jul 2015 07:50 AM
Last Updated : 08 Jul 2015 07:50 AM

கடம்பத்தூர் அருகே பரபரப்பு: கூட்டுறவு வங்கியில் ரூ.1.44 லட்சம் கொள்ளை - 5 கிலோ நகைகள் தப்பின

கடம்பத்தூர் அருகே கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து ரூ.1.44 லட்சம் ரொக்கம் கொள் ளையடிக்கப்பட்ட சம்பவம் திரு வள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.1.25 கோடி நகைகள் தப்பின.

திருவள்ளூர் மாவட்டம் கடம் பத்தூர் அருகே தேவிக்குப்பத் தில் பிரயாங்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் என்ற பெயரில் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடம்பத்தூர் மற்றும் கடம்பத்தூரை ஒட்டியுள்ள 20-க் கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட விவசாயிகள் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் மாலையில் வங்கி பூட்டப்பட்டது.

இந்நிலையில், நள்ளிரவில், மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து வங்கிக்குள் புகுந்து அலாரம் வயர் இணைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து, அதிலிருந்த ரூ.1.44 லட்சம் ரொக்கத்தை கொள் ளையடித்துள்ளனர். பிறகு, அடகு வைக்கப்பட்ட நகைகள் உள்ள லாக்கரை உடைக்க முயன்றுள் ளனர். ஆனால் அது முடியாததால் பணத்துடன் தப்பினர்.

இதனிடையே நகை இருக் கும் லாக்கரை வங்கிக்கு சம்பந்த மில்லாதவர் திறந்தால் வங்கியின் செயலாளர், தலைவர், கடம்பத்தூர் போலீஸார் உள்ளிட்டவர்களுக்கு செல்போனில் எஸ்எம்எஸ் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இதன்படி, லாக்கரை உடைக்க முயன்றபோது அவர் களுக்கு எஸ்எம்எஸ் சென்றது.

இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி செயலாளர் துரைசாமி உள்ளிட்டவர்கள் வங்கிக்கு விரைந்து சென்றபோது கொள்ளைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.

லாக்கரை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.1.25 கோடி மதிப்புள்ள 5 கிலோ நகைகள் தப்பின.

கேமரா இல்லை

இந்த வங்கியில், கண்காணிப்பு கேமரா இல்லை. மேலும் கடம்பத் தூர் காவல் நிலைய தொலை பேசிக்கும் எஸ்எம்எஸ் வரும்படி கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலப் பணியால் துண்டிக்கப்பட்டதால் அவர்களுக்கு தகவல் கிடைக் கவில்லை. இதனால் கொள்ளை யர்களை விரைந்து பிடிக்க முடி யாமல் போனதாகக் கூறப்படு கிறது.

காவல் நிலையம் அருகே நடந்த இச்சம்பவம் குறித்து, கடம்பத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x