Published : 12 Jul 2015 11:05 AM
Last Updated : 12 Jul 2015 11:05 AM

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதில் தமிழகமும் கேரளமும் முன்னிலையில் திகழ்கின்றன: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களாக தமிழகமும், கேரள மும் திகழ்கின்றன என்று சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை சார் பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி மெரினா கடற்கரையில் நேற்று நடை பெற்றது. கலங்கரை விளக்கத்தில் தொடங்கிய இந்த பேரணியை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பேரணியில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள், சென்னை மாநகராட்சி குடும்பநல அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி பயிற்சி செவிலியர்கள், குடும்ப நலத் துறையை சார்ந்த அலு வலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரும் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

இந்த பேரணி பற்றி செய்தி யாளர்களிடம் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

உலக மக்கள் தொகை 732.3 கோடியை கடந்து விட்டதாக கணக் கிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 8 கோடி மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் தொகையில் 37 சதவீதத்தினர் இந்தியா மற்றும் சீனாவில் வசிக்கின்றனர். இந்திய மக்கள் தொகை தற்போது 131.5 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1.8 கோடி மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடியாகும். 2001 முதல் 2011 வரை தமிழகத்தின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 15.6 சதவீதம். இந்தியாவிலேயே மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய மாநிலங்களாக தமிழகமும், கேரளமும் திகழ் கின்றன. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தின் கருத்து முழக்கம் ‘மகிழ்ச்சியான குடும்பத்தின் மந்திரம், இரண்டு குழந்தைகளுக்கிடையே மூன்றாண்டு இடைவெளி’ என்பதாகும். இதை செயல்படுத்த மாநில, மாவட்ட, வட்டார அளவில் உலக மக்கள் தொகை தினம் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல் போன்ற குடும்பநல செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறிடும் வகையில் உலக மக்கள் தொகை தினத்தில் நாம் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த பேரணியில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலத் துறை இயக்குநர் அ.சந்திரநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் கே.குழந்தைச்சாமி, சென்னை பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x