சேலம் வெள்ளிப்பட்டறை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது: 323 கிலோ வெள்ளி மீட்பு

மீட்கப்பட்ட வெள்ளி ஆபரணங்களை பார்வையிட்ட சேலம் மாநகர காவல் ஆணையர் பாபு. படம் : எஸ்.குரு பிரசாத்

மீட்கப்பட்ட வெள்ளி ஆபரணங்களை பார்வையிட்ட சேலம் மாநகர காவல் ஆணையர் பாபு. படம் : எஸ்.குரு பிரசாத்

Updated on: 
1 min read

சேலம்: வெள்​ளிப் பட்​டறை​யில் 550 கிலோ வெள்ளி ஆபரணங்​கள் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வழக்​கில் 5 பேரை கைது செய்தபோலீ​ஸார், அவர்​களிடம் இருந்து 323 கிலோ வெள்ளி ஆபரணங்​களை மீட்​டுள்​ளனர். மீதமுள்ள வெள்ளி ஆபரணங்​களை​யும், கொள்​ளை​யில் தொடர்​புடைய மேலும் சிலரை​யும் தேடி வரு​கின்​றனர்.

சேலம் பள்​ளப்​பட்டி சின்​னேரி வயக்​காடு பகுதி​யில் வெள்​ளிப் பட்​டறை நடத்தி வருபவர் கார்த்​தி​கேயன். இவரது பட்​டறைக்​குள் கடந்த 11-ம் தேதி நள்​ளிர​வில் முகமூடி அணிந்த மர்ம நபர்​கள் புகுந்​தனர். அங்​கிருந்த கண்​காணிப்​புக் கேம​ராக்​களை சேதப்​படுத்​தி​விட்டு, சுமார் 550 கிலோ வெள்​ளிப் பொருட்​களை கொள்​ளை​யடித்​துச் சென்​றனர்.

இதையடுத்து, கொள்​ளை​யர்​களைப் பிடிக்க மாநகர காவல் ஆணை​யர் பாபு உத்​தர​வின்​பேரில், துணை ஆணை​யர் பாஸ்கரன் மேற்​பார்​வை​யில் 3 உதவி ஆணை​யர்​கள் தலை​மையில் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. இந்த தனிப்​படை​யினர் தீவிர விசா​ரணை நடத்தி, கொள்​ளை​யில் தொடர்​புடைய 5 பேரை கைது செய்​துள்​ளனர்.

இது​குறித்து காவல் ஆணை​யர் பாபு செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: இரண்டு கார்​களைப் பயன்​படுத்​திய கொள்​ளை​யர்​கள், சேலத்​தில் இருந்து தஞ்​சாவூர் சென்று, அங்​கிருந்து திண்​டுக்​கல், கோவை என 24 மணி நேரத்​தில் 2,100 கி.மீ. தூரம் பயணம் செய்​துள்​ளனர். சுங்​கச்​சாவடிகளை தவிர்த்​தும், கண்​காணிப்​புக் கேம​ராக்​கள் இல்​லாத சாலைகளை தேர்ந்​தெடுத்​தும் சென்​றுள்​ளனர்.

தனிப்​படை​யில் தொழில்​நுட்​பத் திறன் கொண்ட போலீ​ஸாரை ஈடு​படுத்தி, சேலம் - மதுரை, சேலம் - கோவை உள்​ளிட்ட வழித்​தடங்​களில் இருந்த சுமார் 1,000 கண்​காணிப்​புக் கேம​ராக்​களின் பதிவு​களை ஆய்வு செய்​தோம். மேலும், சாலைகளில் சென்ற வாக​னங்​களை​யும் சரிபார்த்து விசாரித்தோம்.

இதில், தஞ்​சாவூரில் பதுங்​கி​யிருந்த கோவையைச் சேர்ந்த அபிஷேக் (21) என்​பவரைப் பிடித்து விசா​ரித்​தோம். அவரிட​மிருந்து 323 கிலோ வெள்ளி ஆபரணங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அபிஷேக் மீது கொலை, கொள்ளை வழக்​கு​கள் உள்​ளன. இந்த கொள்​ளைச் சம்​பவத்​தில் தொடர்​புடைய ஸ்ரீதர், அருண்​குமார், ஞானப்​பிரகாசம், அண்​ணா​மலை ஆகிய மேலும் 4 பேரும் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். கொள்ளை போனவற்​றில் மீதமுள்ள வெள்ளி ஆபரணங்​களை​யும், கொள்​ளை​யில் தொடர்​புடைய மேலும் சிலரை​யும் தேடி வரு​கிறோம். இவ்​வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>மீட்கப்பட்ட வெள்ளி ஆபரணங்களை பார்வையிட்ட சேலம் மாநகர காவல் ஆணையர் பாபு. படம் : எஸ்.குரு பிரசாத்</p></div>
69 பேருக்கு பணி நியமன ஆணை - முதல்வர் விஜய் வழங்கினார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in