கல்லூரி மாணவியை கிண்டல் செய்த விவகாரம்: தம்பிக்கு பதில் அண்ணனை கொலை செய்த 5 பேர் கைது

கல்லூரி மாணவியை கிண்டல் செய்த விவகாரம்: தம்பிக்கு பதில் அண்ணனை கொலை செய்த 5 பேர் கைது
Updated on
1 min read

பொன்னேரி: ​திரு​வொற்​றியூரில் கல்​லூரி மாண​வியை கிண்​டல் செய்​ததை கண்​டித்த தம்​பிக்கு பதில் அண்​ணன் கொலை செய்​யப்​பட்​டார். இச்​சம்​பவம் தொடர்​பாக சிறு​வன் உட்பட 5 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

சென்​னை, திரு​வொற்​றியூர், சார்​லஸ் நகரை சேர்ந்​தவர் முகீஸ்​வரன் (34). இவரது தம்பி சுனில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு திரு​வொற்​றியூர், அண்​ணா​மலை நகர் ரயில்வே கேட் வழி​யாக கல்​லூரி மாணவி ஒரு​வருடன் பேசி​யபடி நடந்து சென்​றுள்​ளார்.

அப்​போது அங்கு நின்று கொண்​டிருந்த இளைஞர்​கள் மாண​வியை கிண்​டல் செய்​த​தாக கூறப்​படு​கிறது. இதனை தட்​டிக்​கேட்ட சுனிலுக்​கும், அந்த இளைஞர்​களுக்​கும் இடையே தகராறு ஏற்​பட்​டது. அப்​போது அவ்​வழியே சென்ற பொது​மக்​கள், இருதரப்​பினரை​யும் சமா​தானப்படுத்தி அனுப்​பினர்.

ஆனாலும் சுனில் மீது மிகுந்த கோபத்​தில் இருந்த அந்த இளைஞர்​கள், மறு​நாள் அதி​காலை சுனிலின் வீட்​டுக்​குச் சென்​று, சுனில் குறித்து அவரது அண்​ணன் முகீஸ்​வரனிடம் கேட்டு வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர்.

அந்த வாக்​கு​வாதம் முற்​றியதன் விளை​வாக இளைஞர் கும்​பல், முகீஸ்​வரனை கட்​டை​யால் தாக்​கி​விட்​டு தப்​பியோடியது. இதில் தலை​யில் பலத்த காயமடைந்த முகீஸ்​வரன், சென்​னை, ஸ்டான்லி அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்​தார்.

இது தொடர்​பாக கொலை முயற்சி வழக்​குப்பதிவு செய்த சாத்​தங்​காடு போலீ​ஸார், எண்​ணூர், தாழங்​குப்​பம் பகு​தி​யைச் சேர்ந்த லோகேஷ்வரன், ஜான்​சன், ஜெயந்த், தருண் ஆகிய 4 இளைஞர்​கள் மற்​றும் 17 வயது சிறு​வன் ஆகிய 5 பேரை கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முகீஸ்​வரன் நேற்று முன்​தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை சாத்​தங்​காடு போலீ​ஸார் கொலை வழக்​காக மாற்றி தீவிர விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

கல்லூரி மாணவியை கிண்டல் செய்த விவகாரம்: தம்பிக்கு பதில் அண்ணனை கொலை செய்த 5 பேர் கைது
மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்: டாஸ்மாக் ஊழியர்கள் 217 பேர் பணியிடை நீக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in