Published : 09 Jul 2015 08:28 AM
Last Updated : 09 Jul 2015 08:28 AM

வழக்கறிஞர் மீதான வழக்கில் ஆஜராக விடாமல் தடுத்து நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டரை சிறைபிடித்த வழக்கறிஞர்கள்: மன்னிப்பு கேட்க வைத்த அதிகாரிகள்

சென்னை பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் சந்திரசேகரன். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒருவரை அடித்ததாகக் கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் என்பவர் மீது பூந்தமல்லி காவல் நிலைய ஆய் வாளர் சந்திரசேகரன் வழக்குப் பதிவு செய்தார். இதுகுறித்த விசா ரணையின்போது ஆய்வாளர் சந்திரசேகரனுக்கும், லிங்கேஸ்வர னுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசா ரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக ஆய்வாளர் சந்திர சேகரனும் வந்திருந்தார். அப்போது நீதிமன்றத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டு நின்றனர். ஆய்வாளர் சந்திரசேகரன் நீதிமன்றத்தைவிட்டு வெளியே வந்தால் பெரிய பிரச்சினை ஏற்படும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் ரவிக்குமார், இணை ஆணையர் தினகரன், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்கறிஞர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் ஆய்வாளர் சந்திரசேகரனை மன்னிப்பும் கேட்க வைத்தனர். வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் வாங்க வைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் கலைந்து செல்ல, காவல் ஆய்வாளர் சந்திரசேகரனும் அங்கிருந்து சென்றார்.

நீதிமன்றத்தில் நடந்த இந்த பிரச்சினை போலீஸாரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “வழக்கறிஞர்களும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். சட்டத்தை காப்பாற்ற வேண்டிய அவர்கள்தான் மிக மோசமான முறையில் சட்டத்தை மீறுகின்றனர். அவர்கள் என்ன தவறு செய்தாலும் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று மிரட்டுகின்றனர். ‘நான் தவறு செய்திருந்தால் என்னை இங்கேயே வெட்டிப்போடுங்கள்' என்று ஆய்வாளர் சந்திரசேகரன் நீதிமன்றத்தில் கூறியதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவரின் வேதனையான வார்த்தை இது. இப்படியே சென்றால் வழக் கறிஞர்கள் தவறே செய்தாலும் வழக்குப்பதிவு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x