

ஆம்பூரில் நடந்த கலவரம் கண்டிக்கத் தக்கது என்று எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆம்பூர் பிரச்சினை தொடர்பாக எஸ்டிபிஐ, விசிக உள்ளிட்ட தலைவர் கள் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஆம்பூரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹ்மது படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணமடைந்தார். இதற்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆம்பூரில் நடந்த கலவரத்துக்கு காரணமானவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
அந்த கலவரம் தொடர்பாக தினமும் கைதுகள் நடக்கின்றன. இதில் அப்பாவி கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.