போலி டிஐஜி வீட்டில் ரூ.25 லட்சம் ரொக்கம் ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்: காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு

போலி டிஐஜி வீட்டில் ரூ.25 லட்சம் ரொக்கம் ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்: காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
Updated on
1 min read

கோவையில் டிஐஜியாக நடித்து கைதான சண்முகதுரை அவரது நண்பர் மீனாகுமாரி ஆகியோரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான ஆவணங்கள் கைப் பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கோவை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதியிடம் டிஐஜி பேசுவதாகக் கூறி, ஒரு போலீஸ் படையைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வசூலில் ஈடுபட்ட சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த சண்முகதுரை(49) என்ற போலி டிஐஜி, அவரது நண்பர் மீனாகுமாரி(50) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மோசடி, ஆள் மாறாட்டம், கூட்டுச் சதி உள்ளிட்ட 4 பிரிவுகளில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் தனிப்படை போலீஸார் சோதனை நடத்தி, ரூ.100 கோடிக்கும் அதிகமான ஆவணங்களையும், ரூ.25 லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்ட சண்முகதுரை, பல மாவட்டங்களில் தனது கைவரிசை யைக் காட்டியுள்ளது விசாரணை யில் தெரிய வந்துள்ளது. நிறுவனங்கள், நகைக் கடைகள் போன்றவற்றில் கலால் டிஐஜி, லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், திருவண்ணாமலையில் ரூ.25 லட்சத்தை மோசடி செய்துள்ள தாகவும் அவர் மீது புகார் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

பாஸ்போர்ட் முடக்கம்

விசாரணையில் ஈடுபட்டுள்ள சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஜோதியிடம் கேட்டபோது, ‘சண்முகதுரையின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.25 லட்சம் ரொக்கம், ஆளுநர் பதவிக்காக கேரளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பெயரில் ரூ.100 கோடி மதிப்பில் 4 காசோலைகள், இது தவிர மத்திய அரசுப் பணிகள் பெற்றுத் தருவது தொடர்பாகவும், ஒப்பந்தம் தொடர்பாகவும் 100-க்கும் அதிகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த காசோலைகளையும், சண்முக துரை, மீனாகுமாரி ஆகியோரின் பாஸ்போர்ட்டுகளையும் முடக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளன’ என்றார்.

மேலும், இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டிருப்ப தாகவும், வரும் வெள்ளிக்கிழமை இதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in