Published : 05 Jul 2015 11:42 AM
Last Updated : 05 Jul 2015 11:42 AM

சகாயத்துக்கு நெருக்கமானவர் எனக் கூறி போலி அரசாணைகளை காட்டி ரூ.61.50 லட்சம் மோசடி: திருப்பூரை சேர்ந்தவர் மதுரையில் புகார்

கிரானைட் முறைகேட்டை விசாரித்துவரும் உ.சகாயத்துக்கு நெருக்கமான குவாரி அதிபர் எனக்கூறி திருப்பூரை சேர்ந்த 3 பேரிடம் லாரிகளை விற்பதாகத் தெரிவித்து ரூ.61.50 லட்சத்தை மோசடி செய்த ஈரோடு பிரமுகர் குறித்து விசாரணை நடை பெறுகிறது.

திருப்பூர் ராமபிரான் காலனியை சேர்ந்தவர் எஸ்.ஜோதி பாசு. இவரது நண்பர்கள் ஏ.மாரி முத்து, வி.எஸ்.ஆனந்தன். லாரி உரிமையாளர்களான இவர்கள் லாரி வாங்கி, விற்கும் தொழி லிலும் ஈடுபட்டுள்ளனர். ஜோதி பாசு சட்ட ஆணையர் உ.சகாயத் திடம் கடந்த ஜூலை முதல் தேதி அளித்த புகாரில் கூறியிருப்ப தாவது: ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம் தாயுமான வர் வீதியை சேர்ந்தவர் பிலிப் ராஜா. மதுரை மாவட்டம் மேலூர் அருகே இடையபட்டியில் ஆல்வின் கிரானைட்ஸ் என்ற பெயரில் குவாரி நடத்திய தாகவும், அதில் 88 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிலிப்ராஜா தெரிவித்தார். சட்ட ஆணையர் சகாயம் தனது குவாரி மற்றும் லாரிகளை முடக்கி அபராதம் விதித்துள்ளார். அபராதத்தை செலுத்தினால் லாரிகள் விடுவிக்கப்பட்டுவிடும். சகாயம் தனக்கு நன்றாக அறிமுக மானவர் என்பதால் உடனே லாரி களை விடுவித்து விடுவார் என பிலிப் ராஜா கூறினார். அபராதம் செலுத்துவதற்குரிய பணத்தை கொடுத்தால் சரியாக இயங்காத நிலையில் உள்ள 88 லாரிகளையும் தாங்களே எடுத்துக்கொள்ளலாம் எனவும் பிலிப் ராஜா தெரிவித்தார்.

இதை நாங்கள் நம்பாததால், சகாயத்துடன் நெருக்கமாக எடுத் துக்கொண்ட புகைப்படம், அபராதத்தொகை விதித்து சகாயம் தலைமையிலான விசாரணை ஆணையம் அனுப்பியுள்ளதாக அரசு முத்திரையிடப்பட்ட கடிதங் களை அவர் காட்டினார். மேலும் எங்களை மதுரைக்கு சகாயம் அலுவலகத்துக்கே அழைத்து செல்வதாக கூறினார். ஆனால், மதுரை கனிமவள உதவி இயக்கு நர் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே பிலிப் ராஜா சென்றார். திரும்பி வந்ததும் பணத்தை செலுத்தினால் உடனே லாரிகளை விடுவித்துவிடுதாக சகாயம் கூறிவிட்டதாக தெரி வித்தார்.

இதை நம்பி ஈரோட்டிலுள்ள பிலிப் ராஜாவின் வங்கிக் கணக்கில் ரூ.61.50 லட்சத்தை செலுத்தினோம். பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அளித்த விலாசம், புகைப்படம், அரசு கடிதங்கள் அனைத்தும் போலியானவை எனத் தெரிந்தது. இது குறித்து திருப்பூர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். ஜோதிபாசுவிடம் நடந்த சம்பவங்கள் குறித்து சகாயம் விசாரணை நடத்தினார்.

இது குறித்து சகாயம் ஆய்வுக்குழு அலுவலர் கூறுகை யில், ‘பிலிப் ராஜா யார் என்றே சகாயத்துக்கு தெரியாது. ஜோதி பாசுவின் புகாரை திருப்பூர் காவல் ஆணையருக்கு அனுப்பப் பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்த விவ ரங்களை தனக்கு தெரிவிக்கும் படியும் சகாயம் உத்தர விட்டுள்ளார் என்றார்.

கிரானைட் மோசடிகளைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்தி வரும் சகாயத்தின் பெயரிலேயே ஒருவர் மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x