Published : 22 Jul 2015 07:52 AM
Last Updated : 22 Jul 2015 07:52 AM

அரசின் நலத்திட்ட உதவிகள் 8 மாதங்களாக கிடைக்கவில்லை: பொதுவிசாரணையில் மக்கள் புகார்

கடந்த 8 மாதங்களாக தங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங் கள் பற்றிய பொது விசாரணையில் பங்கேற்ற மக்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாடு ஓய்வூதியக் குழுமம் (பென்ஷன் பரிஷத்) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், ஓய் வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பற்றிய பொது விசா ரணை, சென்னையில் நேற்று நடை பெற்றது. உணவு உரிமை ஆணை யர் ஹர்ஷ் மந்தர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி குத்சியா காந்தி, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், பேராசிரி யர் லஷ்மணன், இந்திய பெண்களுக் கான தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உள்ளிட்டோர் பொது விசாரணையில் பங்கேற்றனர்.

பென்ஷன் பரிஷத் அமைப்பின் தலைவர் அருணா ராய் தனது வரவேற்புரையில், ‘‘மத்திய அரசு, ஏழை மக்களை புறக்கணித்து வரு கிறது. அவர்களுக்குத் தரவேண் டிய ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த சலுகைகளும் வழங்கப்படு வதில்லை. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் அதிகரித்து வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. நம் உரிமைகள் கிடைக்கும்வரை தொடர்ந்து போராட வேண்டும்’’ என்றார்.

உணவு உரிமை ஆணையர் ஹர்ஷ் மந்தர் பேசும்போது, ‘‘முந் தைய காங்கிரஸ் அரசு அனை வருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதற் காக சரியான பாதை அமைத்தது. ஆனால், தற்போதைய அரசு இவ் விஷயத்தில் அக்கறை செலுத்த வில்லை. ஸ்வீடன் நாட்டில் இளை ஞர்களாக இருக்கும்போது அவர் கள் நாட்டுக்கு செய்த பணிகளை அங்கீகரித்து அவர்கள் முதியவர் கள் ஆனதும் அரசு ஓய்வூதியம் வழங்குகிறது. ஆனால் இந்தியா வில் முதியவர்களுக்கு இந்த அங்கீகாரம் இல்லை’’ என்றார்.

இந்த விசாரணையில் நலிவுற்ற பெண்கள், அமைப்புசாரா தொழி லாளர்கள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் ஆகியோர் பங்கேற்று தங்களுக்கு கடந்த 8 மாதங்களாக அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தனர்.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் பலன் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங் கினாலும், அதிகாரிகள் ஆதார் அட்டை வேண்டுமென கட்டாயப் படுத்துகின்றனர். கட்டாயம் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற நடைமுறை விதியை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருந்தாலும் அவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழக அரசு திருநங்கைகளுக்கு 2012-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால், ஆதார் அட்டை விவகாரத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்ட 6 மாதங்களுக்குள் நிறுத்தப்பட்டு விட்டது. எனவே, அத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தற்போது வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க வேண்டும் என இந்த விசாரணையில் பங்கேற்று பேசியவர்கள் வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x