

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் உள்ள மேலப்பருத்திக்குடி கிராமத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் ‘தானே’ புயல் நிவாரண நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அப்போது, ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், சாட்சிகள் விசாரணை நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது.
இந்த லஞ்ச வழக்கு பதிவானபோது சிதம்பரம் உதவி ஆட்சியராக சுப்ரமணி யன் இருந்தார். அவர், தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக உள்ளார். இந்த நிலையில், வழக்கில் சாட்சி அளிப் பதற்காக நேற்று கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் மதுரை ஆட்சி யர் சுப்ரமணி யன் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஜெயபால் விசாரணை நடத்தி னார். கடலூர் நீதிமன்றத் தில் மதுரை ஆட்சியர் ஆஜரானதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.