

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 36 பேருக்கு வைப்பு நிதி முதிர்வுத் தொகையை சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி சென்னையில் நேற்று வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும் பத்தில் 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத் தொகை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு ஆணையத்தில் முதலீடு செய்யப் படும்.
இதற்கான ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்தினரிடம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் இந்த வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்ததும் முதிர்வு தொகை பயனாளிக்கு வழங்கப் படுகிறது. அதே போல் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், கால் செயலிழந்தோர் மற்றும் காதுகேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப் படுகின்றன.
சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 60 மாற்றுத்திறனா ளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் மற்றும் 36 பயனாளிகளுக்கு வைப்பு நிதி முதிர்வுத் தொகையை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.