மதுரை நெல்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை: சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை

மதுரை நெல்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை: சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை

Published on

மதுரையில் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை நெல்பேட்டை கரீம்ஷா பள்ளிவாசல் 2-வது தெருவைச் சேர்ந்த ராஜாமுகமது என்பவரது மகன் முகமது யாசின் (27). இவர் மதுரையில் செல்போன் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, இவர் தனது நண்பர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது சம்பவ இடத்துக்கு ஆட்டோவில் வந்த மர்மக் கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசியது. இதனால், அந்த இடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதை பயன்படுத்திய அந்த கும்பல் முகமது யாசினை பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த முகமது யாசின், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

விளக்குத்தூண் போலீஸார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப் பட்ட முகமது யாசினின் சித்தப்பா மன்னர் மைதீன் என்பவர் மீது சில குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவர் கொலை செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in