Published : 25 Jul 2015 01:10 PM
Last Updated : 25 Jul 2015 01:10 PM

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: புதுச்சேரி நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

புதுச்சேரியில் தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு பவுன் 18744 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

ஜுலை மாதத் தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. திங்கட்கிழமையன்று பவுனுக்கு 256 ரூபாயும், செவ்வாய்கிழமை பவுனுக்கு 136 ரூபாயும், புதன் கிழமை 216 ரூபாய் குறைந்து காணப்பட்டது. தங்கத்தின் விலை 19 ஆயித்துக்கும் கீழ் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் பவுனுக்கு 176 ரூபாய் உயர்ந்து மீண்டும் 19 ஆயிரத்தை தாண்டியது.இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் சரிந்து ஒரு கிராம் 2 ஆயிரத்து 343 எனவும் ஒரு பவுன் 18 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் புதுச்சேரியில் உள்ள நகை கடைகளில் பொது மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x