எஸ்எஸ்எல்சி மறுகூட்டலில் மூன்றாமிடம்: வேலூர் அரசு பள்ளி மாணவி சாதனை

எஸ்எஸ்எல்சி மறுகூட்டலில் மூன்றாமிடம்: வேலூர் அரசு பள்ளி மாணவி சாதனை
Updated on
1 min read

வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவி எம்.ஸ்ருதி. இவர் அண்மை யில் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 492 மதிப்பெண் பெற்றார்.

மறுகூட்டலில் அறிவியல் பாடத்தில் ஸ்ருதிக்கு கூடுதலாக 5 மதிப்பெண் கிடைத்துள்ளது. இதன் மூலம் அவரது மொத்த மதிப்பெண் 497 ஆக உயர்ந்துள்ளது. இதை யடுத்து மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித் துள்ளார்.

அவருக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பாராட்டி ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

ஸ்ருதியின் தந்தை மகாலிங்கம், இனிப்பு கடையில் மேற்பார்வை யாளராக உள்ளார். இது குறித்து ஸ்ருதி கூறும் போது, ‘‘மாநில அளவில் ரேங்க் கிடைக்கும் என்று உறுதியாக இருந்தேன். ஆனால் அறிவியல் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால் நம்பிகை யோடு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தேன்.

தற்போது மாநில அளவில் மூன்றாமிடமும் மாவட்ட அளவில் முதலி டமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in