எஸ்.ஐ. தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் மீதான புகார் வாபஸ்? - உயர் அதிகாரிகள் நடவடிக்கையால் போலீஸார் அதிருப்தி

எஸ்.ஐ. தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் மீதான புகார் வாபஸ்? - உயர் அதிகாரிகள் நடவடிக்கையால் போலீஸார் அதிருப்தி
Updated on
1 min read

எஸ்.ஐ. தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்கறிஞர் மீதான புகாரை வாபஸ் வாங்க உயரதிகாரிகள் நிர்பந்திப்பதால் போலீஸார் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை பூந்தமல்லி காவல் ஆய்வாளராக இருப்பவர் சந்திர சேகர். 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பூந்தமல்லி காவல் நிலையத்தில் கீதா என்ற பெண் தனது கணவன் மீது ஒரு புகார் கொடுத்தார். இந்த வழக்கில் கீதாவிற்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் காவல் நிலையத் தில் வந்து பேசினார்.

அப்போது காவல் ஆய் வாளர் சந்திரசேகருக்கும், வழக்கறிஞர் லிங்கேஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங் கிருந்த உதவி ஆய்வாளர் வாசு தேவன் என்பவரை லிங்கேஸ் வரன் தாக்கியதாக கூறப்படு கிறது.

இதுகுறித்து வாசுதேவன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கறிஞர் லிங்கேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இதனால் மனித உரிமை ஆணையம், தமிழக காவல் துறை இயக்குநர் உட்பட பல இடங் களுக்கு காவல் ஆய்வாளர் சந்திரசேகர் மீது லிங்கேஸ்வரன் புகார் அனுப்பினார். இந் நிலையில்தான் ஒரு போதை பொருள் கடத்தல் வழக்கில் சாட்சி சொல்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வந்த காவல் ஆய்வாளர் சந்திரசேகரை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு பரபரப்பு ஏற் படுத்தினர்.

அதை தொடர்ந்து வந்த சென்னை மாநகர காவல் கூடுதல் ஆணையர் ரவிக்குமார், இணை ஆணையர் தினகரன், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமாதானம் பேசி காவல் ஆய்வாளர் சந்திரசேகரை மன்னிப்பு கடிதம் கொடுக்க வைத்தனர். வழக்கறிஞர் மீது கொடுத்த புகாரையும் வாபஸ் வாங்க வைப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீஸார் அதிருப்தி

இதுகுறித்து போலீஸார் சிலரிடம் கேட்டபோது, "ஒரு சாதாரண குடிமகன் சட்டத்தை மதிக்கும் அளவிற்குகூட வழக் கறிஞர்கள் மதிப்பதில்லை. நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் நாம் கொடுக்கும் மரியாதை யைக்கூட, வழக்கறிஞர்கள் கொடுப் பதில்லை. நீதிமன்றத் துக்குள் நீதிபதியின் முன்பு நேற்று முன்தினம் நடந்த சம்பவமே இதற்கு உதாரணம்.

பாதிக்கப்பட்ட உதவி ஆய் வாளரின் நியாயமான புகாரைக்கூட போலீஸ் அதிகாரிகள் வாபஸ் வாங்க வைக்கின்றனர். அப்படி யானால் வழக்கறிஞர்கள் எந்த தவறு செய்தாலும் வழக்கே பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளின் செயல் எங்களை அதிருப்தியடைய வைத்துள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in