கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு சேலம் ஆட்சியரிடம் பெண் மனு

கருணைக் கொலைக்கு அனுமதி கேட்டு சேலம் ஆட்சியரிடம் பெண் மனு
Updated on
1 min read

சேலம் மாவட்டம், ஓமலூர் பஜனை மடத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி சாந்தி. இவர் தன்னை கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

எனக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறி தனியார் மருத்துவமனையில் என் அனுமதி இல்லாமலும், என்னுடைய கணவர் கையொப்பம் இன்றி எனது சினைப்பையை இரு மருத்துவர்கள் அகற்றி விட்டனர். எனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுசம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஓமலூர் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அவர்கள் விசாரணை நடத்தாமல் மருத்துவர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டனர். மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் அருகே கடந்த 13-ம் தேதி தீக்குளிக்க முயன்றேன். அதையும் தடுத்து விட்டனர்.

எனக்கு எங்கு சென்றும் நீதி கிடைக்காத காரணத்தாலும், தவறான அறுவை சிகிச்சையால் ஏற்பட்டுள்ள வலியை தாங்க முடியாததால், என்னை கருணைக் கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in